Chapter 1
Devotees search for the God - (கதிர் ஆயிரம்)
திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்
Sriman Narayana incarnated as both Rama and Krishna and performed many divine deeds. The āzhvār expresses a longing, thinking, "Why wasn't I born in those times to witness them directly!" He reassures by saying, "Do not think that no one saw them directly. Many indeed saw them and rejoiced."
ஸ்ரீமந் நாராயணனே இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்தான்; பல அரிய செயல்களைச் செய்தான். "அவர்களை நேரில் காணவில்லையே! அக்காலத்தில் பிறந்திருக்கக்கூடாதா! என்று நினைக்கத் தோன்றுகிறது! அவர்களை நேரில் கண்டவர்கள் உண்டோ என்று நினையாதீர். பலர் நேரில் கண்டு களித்தார்கள்" என்று ஆழ்வார் கூறுகிறார்.
Verses: 328 to 337
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will reach the ankled lotus feet of dark ocean hued Lord Krishna
- PAT 4.1.1
328 ## கதிர் ஆயிரம் இரவி * கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன் *
எதிர் இல் பெருமை இராமனை * இருக்கும் இடம் நாடுதிரேல் **
அதிரும் கழல் பொரு தோள் * இரணியன் ஆகம் பிளந்து * அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை * உள்ளவா கண்டார் உளர் (1) - PAT 4.1.2
329 நாந்தகம் சங்கு தண்டு * நாண் ஒலிச் சார்ங்கம் திருச்சக்கரம் *
ஏந்து பெருமை இராமனை * இருக்கும் இடம் நாடுதிரேல் **
காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகிக் * கடுஞ்சிலை சென்று இறுக்க *
வேந்தர் தலைவன் சனகராசன் தன் * வேள்வியில் கண்டார் உளர் (2) - PAT 4.1.3
330 கொலையானைக் கொம்பு பறித்துக் * கூடலர் சேனை பொருது அழியச் *
சிலையால் மராமரம் எய்த தேவனைச் * சிக்கென நாடுதிரேல் **
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று * தடவரை கொண்டு அடைப்ப *
அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை * அங்குத்தைக் கண்டார் உளர் (3) - PAT 4.1.4
331 தோயம் பரந்த நடுவு சூழலில் * தொல்லை வடிவு கொண்ட *
மாயக் குழவி யதனை நாடுறில் * வம்மின் சுவடு உரைக்கேன் **
ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி * அடல் விடை ஏழினையும் *
வீயப் பொருது வியர்த்து நின்றானை * மெய்ம்மையே கண்டார் உளர் (4) - PAT 4.1.5
332 நீர் ஏறு செஞ்சடை நீலகண்டனும் * நான்முகனும் முறையால் *
சீர் ஏறு வாசகஞ் செய்ய நின்ற * திருமாலை நாடுதிரேல் **
வார் ஏறு கொங்கை உருப்பிணியை * வலியப் பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றி * சேனை நடுவு போர் செய்யச் * சிக்கெனக் கண்டார் உளர் (5) - PAT 4.1.6
333 பொல்லா வடிவு உடைப் பேய்ச்சி துஞ்சப் * புணர்முலை வாய்மடுக்க
வல்லானை * மா மணிவண்ணனை * மருவும் இடம் நாடுதிரேல் **
பல்லாயிரம் பெருந் தேவிமாரொடு * பௌவம் எறி துவரை *
எல்லாரும் சூழச் சிங்காசனத்தே * இருந்தானைக் கண்டார் உளர் (6) - PAT 4.1.7
334 வெள்ளை விளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் * ஏந்து கையன் *
உள்ள இடம் வினவில் * உமக்கு இறை வம்மின் சுவடு உரைக்கேன் **
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல்கொடித் * தேர்மிசை முன்புநின்று *
கள்ளப் படைத்துணை ஆகிப் * பாரதம் கைசெய்யக் கண்டார் உளர் (7) - PAT 4.1.8
335 நாழிகை கூறு இட்டுக் காத்து நின்ற * அரசர்கள்தம் முகப்பே *
நாழிகை போகப் படை பொருதவன் * தேவகி தன் சிறுவன் **
ஆழிகொண்டு அன்று இரவி மறைப்பச் * சயத்திரதன் தலையை *
பாழில் உருளப் படை பொருதவன் * பக்கமே கண்டார் உளர் (8) - PAT 4.1.9
336 மண்ணும் மலையும் மறிகடல்களும் * மற்றும் யாவும் எல்லாம் *
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் * சிக்கென நாடுதிரேல் **
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி * இருநிலம் புக்கு இடந்து *
வண்ணக் கருங்குழல் மாதரோடு * மணந்தானைக் கண்டார் உளர் (9) - PAT 4.1.10
337 ## கரிய முகில் புரை மேனி மாயனைக் * கண்ட சுவடு உரைத்து *
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி * விளை கழனிப் புதுவை **
திருவில் பொலி மறைவாணன் * பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் *
பரவும் மனம் உடைப் பத்தர் உள்ளார் * பரமன் அடி சேர்வர்களே (10)