PAT 4.1.8

ஆழிகொண்டு சூரியனை மறைத்த ஆயன்

335 நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே *
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன் *
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை *
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர்.
335 nāzhikai kūṟu iṭṭuk kāttu niṉṟa * aracarkal̤tam mukappe *
nāzhikai pokap paṭai pŏrutavaṉ * tevaki taṉ ciṟuvaṉ **
āzhikŏṇṭu aṉṟu iravi maṟaippac * cayattirataṉ talaiyai *
pāzhil urul̤ap paṭai pŏrutavaṉ * pakkame kaṇṭār ul̤ar (8)

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

335. Kannan, the young son of Devaki, hid the light of the sun for a while(30 nazhigai) with His discus(chakra), when the enemy kings protected Jayathradhan. If you want to see Him there are people who saw him drive the chariot for Arjunā when Arjunā fought and killed Jayathradhan in the Bhārathā war.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாழிகை நாழிகைகளை; கூறி இட்டு பங்கிட்டுக்கொண்டு; காத்து நின்ற காத்துக் கொண்டிருந்த; அரசர்கள் தம் முகப்பே ராஜாக்கள் முன்னிலையில்; நாழிகை பகல் முப்பது நாழிகையும்; போக போயிற்றென்று தோற்றும்படியாக; படைபொருதவன் சக்கரத்தையுடைய; தேவகி தேவகியின்; தன் சிறுவன் மைந்தன் கண்ணன்; ஆழி கொண்டு சக்ராயுதத்தைக்கொண்டு; அன்று இரவி அன்று சூரியனை; மறைப்ப மறைக்க; சயத்திரதன் தலையை சயத்திரதன் தலையை; பாழில் உருள பள்ளத்திலே உருளும்படி; படை பொருதவன் போரிட்ட அர்ஜுனன் அருகில்; பக்கமே கண்ணனை; கண்டார் உளர் பார்த்தவர்கள் உள்ளனர்
aracarkal̤ tam mukappe in front of the king; kāttu niṉṟa who were waiting; kūṟi iṭṭu after dividing among themselves; nāḻikai the time; taṉ ciṟuvaṉ Kannan, the son of; tevaki devaki; paṭaipŏrutavaṉ the One with the holy wheel (Chakra); āḻi kŏṇṭu using His Chakra; maṟaippa hid the; aṉṟu iravi sun; nāḻikai for 30 nazhigai; poka and created darkeness; paṭai pŏrutavaṉ allowing arjuna; pāḻil urul̤a to cut off; cayattirataṉ talaiyai Jayathradhan's head; kaṇṭār ul̤ar there are those who have seen; pakkame that Kannan