PAT 3.8.3

தாமோதரனுக்கே உரியவளோ?

299 குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி *
தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி *
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு *
துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ?
299
kumari maNam seydhu koNdu * kOlam seydhu illaththiruththi *
thamarum piRarum aRiya * dhāmOdharaRku enRu sāRRi *
amarar padhiyudai dhEvi * arasāNiyai vazhipattu *
thumilam ezhappaRai kotti * thOraNam n^āttidum kolO? * 3.

Ragam

ஆனந்தபைரவி

Thalam

ஆதி

Bhavam

Mother

Simple Translation

299. We made arrangements for my daughter’s wedding, decorated her beautifully and kept her at home. We announced to our relatives that we are giving her in marriage to Dāmodaran. We made her worship the peepul tree( according to our custom) Will the people beat the sounding drums, and decorate this village with beautiful garlands?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குமரி கன்னிப்பெண்ணுக்கு; மணம் செய்யும் மங்கலச்சடங்கு; செய்து கொண்டு செய்து கொண்டு; கோலம் செய்து ஆடை ஆபரண அலங்காரங்கள் செய்து; இல்லத்து இருத்தி திருமண மேடையில் உட்கார வைத்து; தமரும் பிறரும் உற்றாரும் உறவினரும்; அறிய அறியும்படி; தாமோதரற்கு கண்ணனுக்கு; என்று சாற்றி என்று பறை சாற்றி; அமரர் பதியுடை தேவராஜனின் மனைவியான; தேவி தேவி இவளை; அரசாணியை குல வழக்கப்படி அரசங்கிளையை; வழிபட்டு வழிபட்டு; துமிலம் எழ பேரொலி எழும்படி; பறை கொட்டி பறைகளை முழக்கி; தோரணம் ஊரெங்கும் தோரணங்கள்; நாட்டிடும் கொலோ? நாட்டி கொண்டாடுவார்களோ என்னவோ?