PAT 3.8.4

செங்கண்மால் இவளை மணந்து விடுவானோ?

300 ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால் *
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான் *
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை *
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ?
300 ŏru makal̤ taṉṉai uṭaiyeṉ * ulakam niṟainta pukazhāl *
tirumakal̤ pola val̤artteṉ * cĕṅkaṇ māl tāṉ kŏṇṭu poṉāṉ **
pĕru makal̤āyk kuṭi vāzhntu * pĕrumpil̤l̤ai pĕṟṟa acotai *
marumakal̤aik kaṇṭu ukantu * maṇāṭṭup puṟamcĕyyuṅ kŏlo? (4)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

300. I have only one daughter and I raised her like Lakshmi, the beautiful goddess. The world praises me as a good mother. Lovely-eyed Thirumāl has taken her with him. Will Yashodā, a woman of a respectable family and the mother of a wonderful son, feel happy seeing her daughter-in-law and perform the post-marriage ceremonies for her well? Will I see that?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒரு மகள் தன்னை ஈடு இல்லாத ஒரே மகளை; உடையேன் உடைய நான்; உலகம் நிறைந்த புகழால் உலகத்தோர் போற்றும்படி; திருமகள் போல மகாலக்ஷ்மியைப்போல்; வளர்த்தேன் வளர்த்தேன்; செங்கண் சிவந்த கண்களையுடைய; மால் தான் கண்ணன்; கொண்டு எனக்குத் தெரியாமல் தானே வந்து; போனான் அழைத்துப் போய்விட்டான்; பெருமகளாய் பெரிய இல்லத்தலைவியாய்; குடி வாழ்ந்து வாழும்; பெரும் பிள்ளை பெற்ற பெருமை பொருந்திய பிள்ளையைப் பெற்ற; அசோதை மருமகளை யசோதை மருமகளை; கண்டு உகந்து கண்டு மகிழ்ந்து; மணாட்டு புறம் மருமகளுக்கு செய்யவேண்டிய சீர்மைகளை; செய்யும் செய்வாளோ அல்லது; கொலோ? செய்யாதிருப்பாளோ?
val̤artteṉ I raised; ŏru makal̤ taṉṉai my only incomparable daughter; uṭaiyeṉ whom I; tirumakal̤ pola like Mahalakshmi; ulakam niṟainta pukaḻāl that the word praises; cĕṅkaṇ the lovely-eyed; māl tāṉ Thirumāl; kŏṇṭu without my knowledge came; poṉāṉ and took her with Him; acotai marumakal̤ai will Yashodā; kuṭi vāḻntu living as; pĕrumakal̤āy a woman of a respectable family; pĕrum pil̤l̤ai pĕṟṟa and the mother of a wonderful son; kaṇṭu ukantu be happy to see her daughter in law; cĕyyum and perform; maṇāṭṭu puṟam the post-marriage ceremonies for her; kŏlo? or not?