PAT 3.8.2

தந்திரத்தில் வல்ல நாராயணன்

298 ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள் *
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு *
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை *
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ?
298 ŏṉṟum aṟivu ŏṉṟu illāta * uruvaṟaik kopālar taṅkal̤ *
kaṉṟu kāl māṟumā pole * kaṉṉi iruntāl̤aik kŏṇṭu **
naṉṟum kiṟi cĕytu poṉāṉ * nārāyaṇaṉ cĕyta tīmai *
ĕṉṟum ĕmarkal̤ kuṭikku * or eccukkŏl? āyiṭuṅ kŏlo? (2)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

298. Like the ignorant, simple-looking cowherds who steal calves Nārāyanān has taken away my obedient daughter with him by his charms. Won’t this terrible thing that Nārāyanān did be a disgrace to our family?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒன்று அறிவு பொருந்திய ஞானம்; ஒன்றும் இல்லாத துளியும் இல்லாத; உருவறை வடிவழகுமில்லாத; கோபாலர் தங்கள் ஆயர்களானவர்கள்; கன்று கால் நல்ல அழகிய கன்றுகளை; மாறுமா உடையவர்கள் அறியாமல்; போலே களவாடுவதைப் போலே; கன்னி சிறு பெண்ணாய்; இருந்தாளைக் கொண்டு கீழ்ப் படிந்து இருந்த என் மகளை; நன்றும் கிறி செய்து சரியான சூழ்ச்சி செய்து; போனான் அழைத்துப் போய்விட்டான்; நாராயணன் நாராயணன்; செய்த தீமை புரிந்திருக்கும் தீமையானது; என்றும் எமர்கள் எப்பொழுதும் எங்கள்; குடிக்கு ஓர் குலத்துக்கு ஒரு; ஏச்சுக் கொல் தீராப் பழி; ஆயிடுங்கொல்லோ ஆகிவிட்டது அல்லவோ
kopālar taṅkal̤ just like how the cowherds; uruvaṟai without any form of beauty; ŏṉṟum illāta and without any; ŏṉṟu aṟivu knowledge; pole steal; kaṉṟu kāl the beautiful calfs; māṟumā from the riches; naṉṟum kiṟi cĕytu by His charm; poṉāṉ Kannan took away; kaṉṉi my little girl; iruntāl̤aik kŏṇṭu who was obedient to me; nārāyaṇaṉ what Narayanan; cĕyta tīmai has done; ĕṉṟum ĕmarkal̤ will bring; eccuk kŏl disgrace; kuṭikku or to our family; āyiṭuṅkŏllo isnt it so