தாய்மார் மோர் விற்கப் போவார் தகப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவார் நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர் படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பவனே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே -3-1-9– –
பதவுரை (பெண்களை அகம் பார்க்க வைத்து விட்டு) தாய்மார்–தாய்மாரானவர் மோர் விற்க–மோர் விற்பதற்கு போவர்–(வெளியூருக்குப்) போவர்கள்