PAT 3.1.10

இருபத்தொரு நாழிகை மறைந்த மாயன்

232 தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச்
சோலைத்தடம்கொண்டுபுக்கு *
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை
மூவேழுசென்றபின்வந்தாய் *
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்
உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன் *
அத்தா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.
232 tŏttār pūṅkuzhal kaṉṉi ŏruttiyaic * colait taṭam kŏṇṭu pukku *
muttār kŏṅkai puṇarntu irā nāzhikai * mūvezhu cĕṉṟapiṉ vantāy **
ŏttārkku ŏttaṉa pecuvar * uṉṉai urappave nāṉ ŏṉṟum māṭṭeṉ *
attā uṉṉai aṟintukŏṇṭeṉ * uṉakku añcuvaṉ ammam tarave (10)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

232. You went into a blooming garden with a young girl whose hair is adorned with a bunch of flowers, embraced her breasts adorned with pearl chains, and stayed there with her all night. You only returned after the night was gone and came at dawn. People want to gossip about you. I let them say what they want. I won’t shout at you. Dear child, I know who you are.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொத்தார் கொத்து கொத்தாய்; பூங்குழல் பூ சூட்டியுள்ள; கன்னி ஒருத்தியை ஒரு பெண்ணை; சோலைத் தடம் பெரிய சோலைக்குள்; கொண்டு புக்கு அழைத்துப்போய்; கொங்கை மார்பில்; முத்து ஆர் முத்துமாலை அணிந்திருந்த அவளை; புணர்ந்து இரா தழுவிக்கொண்டு இரவு; நாழிகை மூவேழு மூன்று ஜாமத்திற்கு; சென்றபின் பிறகு வீடு; வந்தாய் வந்தாய்; ஒத்தார்க்கு ஒத்தன இதனால் கண்டவர் கண்டபடி; பேசுவர் உன்னை உன்னைப்பற்றி குற்றம் பேசுவார்கள்; உரப்பவே நான் உன்னைக் கோபிக்க நான்; ஒன்றும் மாட்டேன் சிறிதும் சக்தியுடையவளில்லை; அத்தா! அப்பனே அத்தா அப்பனே!; அறிந்து கொண்டேன் இன்று உன்னை அறிந்துகொண்டேன்; உனக்கு அஞ்சுவன் பயப்படுகிறேன் உனக்கு; அம்மம் தரவே பால் கொடுக்கவே!
kŏṇṭu pukku You went with; kaṉṉi ŏruttiyai a girl adorned with; tŏttār bunch of; pūṅkuḻal flowers; colait taṭam into a blooming garden; kŏṅkai her breasts; muttu ār was adorned with pearl chains; puṇarntu irā You embraced her; nāḻikai mūveḻu stayed all night; vantāy then came; cĕṉṟapiṉ home; ŏttārkku ŏttaṉa hence those who saw You; pecuvar uṉṉai will gossip about You; ŏṉṟum māṭṭeṉ I wont; urappave nāṉ shout at You; attā! appaṉe Oh Lord!; aṟintu kŏṇṭeṉ today I came to know You; uṉakku añcuvaṉ I am scared; ammam tarave to give You milk