PAT 3.1.8

சொல்லப்படாதன செய்தவன்

230 வாளாவாகிலும்காணகில்லார்
பிறர்மக்களைமையன்மைசெய்து *
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து
நீசொல்லப்படாதனசெய்தாய் *
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி
கெட்டேன்! வாழ்வில்லை * நந்தன்
காளாய்! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.
230 vāl̤ā ākilum kāṇakillār * piṟar makkal̤ai maiyaṉmai cĕytu *
tol̤āl iṭṭu avaroṭu til̤aittu * nī cŏllap paṭātaṉa cĕytāy **
kel̤ār āyar kulattavar ip pazhi kĕṭṭeṉ * vāzhvillai * nantaṉ
kāl̤āy uṉṉai aṟintukŏṇṭeṉ * uṉakku añcuvaṉ ammam tarave (8)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

230. Even if you keep quiet without doing any mischief, people don’t believe it. You fascinate the beloved daughters of others, embrace and enjoy them, and do things one can’t spell out. No matter what I say about you, the cowherd families don’t listen. They blame me because of you and I can no longer listen to all their complaints. Son of Nandan, you are like a bull. I know who you are and I’m afraid to give you food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாளா ஆகிலும் நீ விஷமம் செய்யாமல் வெறுமனே இருந்தாலும்; பிறர் மற்றவர்கள் உன்னை; காணகில்லார் காண விரும்பமாட்டார்கள்; மக்களை பெண்களை; மையன்மை செய்து மயக்கி அவர்களை; தோளால் இட்டு தோளால் அணைத்துக் கொண்டு; அவரோடு நீ அவர்களோடு; திளைத்து விளையாடுகிறாய்; சொல்ல சொல்லவொண்ணாத; படாதன தீம்புகளை; செய்தாய் செய்கிறாய்; ஆயர் குலத்தவர் ஆயர் குலத்தவர்கள்; கேளார் கேட்டதில்லை; இப் பழி இப்படிப்பட்ட பழிகளை; கெட்டேன்! நான் கேட்டு கெட்டுப் போனேன்; வாழ்வில்லை வாழ்வில்லை எனக்கு!; நந்தன் காளாய்! நந்தகோபனின் பிள்ளையே!; உன்னை என் பிள்ளை என்று நினைத்திருந்தேன்; அறிந்து கொண்டேன் இன்று உண்மை அறிந்துகொண்டேன்; உனக்கு அஞ்சுவன் பயப்படுகிறேன் உனக்கு; அம்மம் தரவே பால் கொடுக்கவே
vāl̤ā ākilum even if You stay quiet; piṟar the others; kāṇakillār do not want to see You; maiyaṉmai cĕytu You mesmerize; makkal̤ai the girls; tol̤āl iṭṭu and embrance them; til̤aittu You play; avaroṭu with them; cĕytāy and do; paṭātaṉa things; cŏlla one cant spell out; kĕṭṭeṉ! I am hearing; ip paḻi accusations; āyar kulattavar that Aiyarpadi residents; kel̤ār never heard off; vāḻvillai I dont have a life!; nantaṉ kāl̤āy! the Son of Nandagopar!; uṉṉai I thought of You as my child; aṟintu kŏṇṭeṉ today I came to know; uṉakku añcuvaṉ I am scared; ammam tarave to give You milk