Your browser does not support the audio element.
audio
202 வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும் *
கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம் உன்மகனைக்காவாய் *
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல *
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய். (2)
203 வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ! வருகஇங்கே *
கரியகுழல்செய்யவாய்முகத்துக்
காகுத்தநம்பீ! வருகஇங்கே *
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்!
அஞ்சனவண்ணா! அசலகத்தார் *
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே.
204 திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன் *
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான் *
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ? அசோதாய்! *
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே.
205 கொண்டல்வண்ணா! இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய்! இங்கேபோதராயே *
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா! இங்கேபோதராயே *
உண்டுவந்தேன்அம்மமென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும் *
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக்
கண்ணபிரான்கற்றகல்விதானே.
206 பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்
பல்வளையாள்என்மகளிருப்ப *
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன் *
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான் *
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய்! உன்மகனைக்கூவாய்.
207 போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய் *
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன் *
கோதுகலமுடைக்குட்டனேயோ!
குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா! *
வேதப்பொருளே! என்வேங்கடவா!
வித்தகனே! இங்கேபோதராயே.
208 செந்நெலரிசிசிறுபருப்புச்
செய்த அக்காரம்நறுநெய்பாலால் *
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன் *
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான் *
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே.
209 கேசவனே! இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே *
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே *
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று *
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா! இங்கேபோதராயே.
210 கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு *
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான் *
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான் *
உன்மகன்தன்னையசோதைநங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே.
211 சொல்லிலரசிப்படுதிநங்காய்.
சூழலுடையன்உன்பிள்ளைதானே *
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு *
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து *
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே.
212 வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன் *
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல் *
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி *
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே. (2)