நிகமத்தில் இத் திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லி தலை கட்டுகிறார் –
போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை மாதர்க்கு உயர்ந்த யசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை பாதப் பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே -2-8-10–
பதவுரை
மாதர்க்கு உயர்ந்த–ஸ்திரீகளுள் சிறந்த அசோதை–யசோதைப் பிராட்டி மகன் தன்னை–தன் புத்ரனான கண்ணனை