PAT 2.8.9

அந்திப் போதினில் விளக்கேற்றுவேன், வா

200 இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார் *
தருக்கேல்நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள் *
திருக்காப்புநான்உன்னைச்சாத்தத் தேசுடைவெள்ளறைநின்றாய்! *
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய்.
200 irukkŏṭu nīr caṅkil kŏṇṭiṭṭu * ĕzhil maṟaiyor vantu niṉṟār *
tarukkel nampi canti niṉṟu * tāy cŏlluk kŏl̤l̤āy cila nāl̤ **
tirukkāppu nāṉ uṉṉaic cāttat * tecu uṭai vĕl̤l̤aṟai niṉṟāy *
uruk kāṭṭum anti vil̤akku * iṉṟu ŏl̤i kŏl̤l̤a eṟṟukeṉ vārāy (9)

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

200. Vedic scholars come holding conches with water and stand near you, reciting the Vedās. O dear child, don’t be proud! You must listen to your mother's words for a few days. O You reside at Thiruvellarai with a divine glow. It is evening. I will ward off the evil eyes by putting Kāppu on you. Let me light the lamp so that I can see your divine form clearly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேசு உடை தேஜஸ் நிறைந்த; வெள்ளறை நின்றாய்! வெள்ளறையில் நிற்பவனே!; தாய் சொல்லு தாய் சொல்லுவதை; சில நாள் இன்னும் சில நாட்களாவது; கொள்ளாய் கேட்டருளவேண்டும்; இருக்கொடு வேத மந்திரங்களை கூறியபடி; நீர் சங்கிற் தீர்த்தத்தை சங்கிலே; கொண்டிட்டு எடுத்து; உன்னைச் சாத்த உனக்கு காப்பிட; எழில் மறையோர் பொலிவு மிக்க வேத புருஷர்கள்; வந்து நின்றார் வந்து நிற்கிறார்கள்; தருக்கேல் நம்பி! செருக்கடையாதே நாயகனே!; சந்தி நின்று சந்தியில் நின்று கொண்டு; உருக் காட்டும் உன் திரு உருவத்தைக் காட்டும்; அந்தி விளக்கு இன்று திருவந்திக் காப்பை இப்போது; ஒளி கொள்ள வெளிச்சம் பாய; ஏற்றுகேன் வாராய் ஏற்றுகிறேன் நீ வாராய்!
vĕl̤l̤aṟai niṉṟāy! You reside at Thiruvellarai; tecu uṭai with a divine glow; tāy cŏllu what Your mother says; kŏl̤l̤āy You should listen to it; cila nāl̤ atleast for a few more days; ĕḻil maṟaiyor vedic scholars; irukkŏṭu are reciting vedic chants; kŏṇṭiṭṭu and they brought; nīr caṅkiṟ conches with water; uṉṉaic cātta to offer it to You; vantu niṉṟār they standing close to You; tarukkel nampi! O dear child, don’t be proud!; canti niṉṟu standing at the junction; eṟṟukeṉ vārāy You come, I will light; anti vil̤akku iṉṟu a lamp; uruk kāṭṭum so that I can see Your divine form; ŏl̤i kŏl̤l̤a to brighten this place