Your browser does not support the audio element.
audio
162 பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை *
முன்னையமரர் முதல்தனிவித்தினை *
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட *
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2)
163 பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம் *
மாயச்சகடும் மருதும்இறுத்தவன் *
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல் *
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
164 திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த *
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் *
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்!
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்.
165 பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு *
கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு *
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட *
பிள்ளையைவந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேய்முலையுண்டான் குழல்வாராய்அக்காக்காய்.
166 கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை *
பற்றியெறிந்த பரமன்திருமுடி *
உற்றனபேசி நீஓடித்திரியாதே *
அற்றைக்கும்வந்து குழல்வாராய்அக்காக்காய்!
ஆழியான்தன் குழல்வாராய்அக்காக்காய்.
167 கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை *
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால் *
விழிக்குமளவிலே வேரறுத்தானை *
குழற்குஅணியாகக் குழல்வாராய்அக்காக்காய்!
கோவிந்தன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
168 பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும் *
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே *
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர் *
வண்டொத்திருண்ட குழல்வாராய்அக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
169 உந்தியெழுந்த உருவமலர்தன்னில் *
சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன் *
கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி *
தந்தத்தின்சீப்பால் குழல்வாராய்அக்காக்காய்!
தாமோதரன்தன் குழல்வாராய்அக்காக்காய்.
170 மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த *
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன் *
பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து *
பின்னேயிருந்து குழல்வாராய்அக்காக்காய்!
பேராயிரத்தான் குழல்வாராய்அக்காக்காய்.
171 கண்டார்பழியாமே அக்காக்காய் * கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல் *
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல் *
கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2)