PAT 2.4.7

குறை கூறமாட்டேன்

158 கறந்தநற்பாலும் தயிரும் கடைந்துஉறிமேல்வைத்த வெண்ணெய் *
பிறந்ததுவேமுதலாகப் பெற்றறியேன்எம்பிரானே! *
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே *
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய்.
158 kaṟanta naṟpālum tayirum * kaṭaintu uṟimel vaitta vĕṇṇĕy *
piṟantatuve mutalākap * pĕṟṟaṟiyeṉ ĕmpirāṉe **
ciṟanta naṟṟāy alar tūṟṟum * ĕṉpataṉāl piṟar muṉṉe *
maṟantum uraiyāṭa māṭṭeṉ * mañcaṉam āṭa nī vārāy (7)

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

158. Since your birth, I have not seen good milk the churned yogurt and the butter that I put on the uri. O beloved child, I’ll be careful not to speak of these things in front of others because they may gossip, "I’m your stepmother and am treating you badly. "Come and bathe in the fragrant turmeric water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்பிரானே! பெம்மானே!; கறந்த நற் பாலும் அப்போது கறந்த பாலையும்; தயிரும் தயிரையும்; கடைந்து கடைந்து; உறிமேல் வைத்த உறியில் வைத்த; வெண்ணெய் வெண்ணெயையும்; பிறந்ததுவே முதலாகப் நீ பிறந்தது முதல்; பெற்று அறியேன் பெற்றதே இல்லை; சிறந்த நற்றாய் சீர்மிக்க நல்ல தாயாரும்; அலர் தூற்றும் பழிக்கின்றாளே; என்பதனால் என்று சொல்வார்களே என்பதால்; பிறர் முன்னே மற்றவர்கள் முன்பு; மறந்தும் மறந்து போயும்; உரையாட மாட்டேன்! வாயைத் திறக்கமாட்டேன்; மஞ்சனமாட நீ வாராய் நீராட வருவாயே!