PAT 2.4.8

பிறந்த திருநன்னாள்

159 கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்து *
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும் *
நின்திறத்தேனல்லேன்நம்பீ! நீபிறந்ததிருநல்நாள் *
நன்றுநீநீராடவேண்டும் நாரணா! ஓடாதேவாராய்.
159 kaṉṟiṉai vāl olai kaṭṭi * kaṉikal̤ utira ĕṟintu *
piṉ tŏṭarntu oṭi or pāmpaip * piṭittukkŏṇṭu āṭṭiṉāy polum **
niṉtiṟatteṉ alleṉ nampī * nī piṟanta tiru naṉṉāl̤ *
naṉṟu nī nīrāṭa veṇṭum * nāraṇā oṭāte vārāy (8)

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

159. You tied palm leaves to the tails of calves, and you shook fruits from the trees and threw them at the Asuran and killed him. You caught the tail of the snake Kālingan and danced on his heads. O best among men! I am not as strong as you are. Today is your auspicious birthday. You should take a good bath, O Nārana. Don’t run away, come here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கன்றினை வால் ஒரு கன்றின் வாலில்; ஓலை கட்டி ஓலையை கட்டியும்; கனிகள் உதிர பழங்கள் உதிர ஒரு கன்றை; எறிந்து மரத்தின் மீது எறிந்தும்; பின் தொடர்ந்து ஓடி பின்னால் தொடர்ந்து ஓடி; ஒரு பாம்பை காளிங்கன் என்னும் பாம்பை; பிடித்துக் கொண்டு பிடித்துக் கொண்டு; ஆட்டினாய் போலும் ஆட்டினாயே; நின் திறத்தேன் உன்னுடைய தன்மைகள் ஒன்றும் நான்; அல்லேன் அறியேன்; நம்பீ! நீ பிறந்த நம்பி நீ பிற்ந்த; திரு நல் நாள் திருநாள்; நன்று நீ நீ நன்றாக; நீராட வேண்டும் நீராட வேண்டும்; நாரணா! நாராயணா!; ஓடாதே வாராய் ஓடாமல் இங்கே வா!
olai kaṭṭi You tied palm leaves; kaṉṟiṉai vāl to the tail of calves; ĕṟintu You threw at trees; kaṉikal̤ utira and have the fruits fall from them; piṉ tŏṭarntu oṭi You ran behind; ŏru pāmpai the snake Kālingan; piṭittuk kŏṇṭu caught it; āṭṭiṉāy polum and danced on it; alleṉ I cannot; niṉ tiṟatteṉ fully understand Your greatness; nampī! nī piṟanta Oh lord, its your biirthday today; tiru nal nāl̤ hence its auspicious; naṉṟu nī You have to have a; nīrāṭa veṇṭum good bath; nāraṇā! Narayana!; oṭāte vārāy Dont run away and please come!