PAT 2.4.6

பழங்கள் ஸமர்ப்பித்தல்

157 எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி *
கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யும்பிரானே! *
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே *
வண்ணம்அழகியநம்பீ! மஞ்சனமாடநீவாராய்
157 ĕṇṇĕyk kuṭattai uruṭṭi * il̤ampil̤l̤ai kil̤l̤i ĕzhuppi *
kaṇṇaip puraṭṭi vizhittuk * kazhakaṇṭu cĕyyum pirāṉe **
uṇṇak kaṉikal̤ taruvaṉ * ŏlikaṭal otanīr pole *
vaṇṇam azhakiya nampī * mañcaṉam āṭa nī vārāy (6)

Ragam

Bilahari / பிலஹரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

157. You roll the pots and spill the ghee from them. You pinch sleeping babies and wake them up and you open your eyes wide and scare them by making faces. O beloved lord, I will give you fruits to eat. O beautiful one with the lovely color of the sounding ocean that has roaring waves, come to bathe in the fragrant turmeric water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எண்ணெய்க் குடத்தை எண்ணெய்க் குடத்தை; உருட்டி ஓசை பட உருட்டி; இளம் பிள்ளை உறங்கும் குழந்தையை; கிள்ளி எழுப்பி கிள்ளி எழுப்பி; கண்ணை கண்ணை; புரட்டி விழித்து உருட்டி பயமுறுத்தி; கழகண்டு குறும்புகளை; செய்யும் பிரானே! செய்யும் பிரானே; உண்ண நீ சாப்பிட; கனிகள் தருவன் பழங்களைத் தருவேன்; ஒலிகடல் ஓசை எழுப்பும் அலை கடல்; ஓதநீர் போலே ஓதநீர் போன்ற; வண்ணம் நிறத்தையுடைய; அழகிய நம்பீ! அழகிய சீலனே!; மஞ்சனம் ஆட நீ வாராய் நீராட வருவாயே!
uruṭṭi You roll the pots; ĕṇṇĕyk kuṭattai containing oil and spill them; kil̤l̤i ĕḻuppi You pinch and; il̤am pil̤l̤ai wake up the sleeping babies; kaṇṇai Oh Kanna; puraṭṭi viḻittu You roll your eyes and scare them; cĕyyum pirāṉe! Oh Lord; kaḻakaṇṭu who does mischiefs; kaṉikal̤ taruvaṉ l will give fruits; uṇṇa for You to eat; aḻakiya nampī! Oh beautiful One!; vaṇṇam with skin tone; otanīr pole that of the waves; ŏlikaṭal of a roaring ocean; mañcaṉam āṭa nī vārāy come to bathe!