விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன் புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ கண்ணா என் கார் முகிலே கடல்வண்ணா காவலனே முலை உணாயே –2-3-6- –
பதவுரை
விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி அழுதிட்டாய்–அழுதாய்;