PAT 2.3.7

ஆயர்பாடிப்பிரான் திரிவிக்கிரமன்

145 முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு *
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப்
பசுநிரைமேய்த்தாய்! *
சிலையொன்றுஇறுத்தாய்! திரிவிக்கிரமா!
திருவாயர்பாடிப்பிரானே! *
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே
145 mulai etum veṇṭeṉ ĕṉṟu oṭi * niṉkātil kaṭippaip paṟittu ĕṟintiṭṭu *
malaiyai ĕṭuttu makizhntu kal-māri kāttup * pacunirai meyttāy **
cilai ŏṉṟu iṟuttāy tirivikkiramā * tiru āyarpāṭip pirāṉe *
talai nilāp pote uṉkātaip pĕrukkāte * viṭṭiṭṭeṉ kuṟṟame aṉṟe? (7)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

145. You refused to suck the milk I fed and ran away, plucking and flinging your earrings. You lifted the Govardhanā mountain effortlessly with zeal and protected the herd from the stones that rained. You broke Lord Shivā's bow (as Rāma) to wed Sita. O ThrivikRāman! You are the chief of the beautiful cowherd village, Gokulam. I failed to bore your ears when you were an infant, with your head shaking. Wasn’t that my mistake?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முலை ஏதும் வேண்டேன் நீ தரும் பால் ஏதும் வேண்டாம்; என்று ஓடி என்று சொல்லி ஓடி; நின் காதிற் கடிப்பை உன் காதணியை; பறித்து எறிந்திட்டு கழட்டி எறிந்துவிட்டு; மலையை எடுத்து கோவர்த்தன கிரியை குடையாய் எடுத்து; மகிழ்ந்து உற்சாகமடைந்து; கல் மாரி பனிக்கட்டிப் பொழிவிலிருந்து; காத்து காப்பாற்றி; பசுநிரை மேய்த்தாய்! பசுமாடுகளை மேய்த்தவனே!; சிலை ஒன்று சீதையின் கரம் பிடிக்க வில்; இறுத்தாய்! ஒடித்தவனே!; திரிவிக்கிரமா! உலகளந்தவனே!; திரு ஆயர் பாடிப் பிரானே! ஆயர்பாடி பெம்மானே!; தலை நிலா குழந்தை பருவத்தில்; போதே தலை நிற்காத போதே; உன் காதை உன் காதை; பெருக்காதே திரி இட்டு துளையைப்; விட்டிட்டேன் பெரிதாக்காதது; குற்றமே அன்றே என் குற்றமன்றோ!
mulai etum veṇṭeṉ I dont want your milk; ĕṉṟu oṭi You said and ran away; paṟittu ĕṟintiṭṭu You removed and threw away; niṉ kātiṟ kaṭippai Your earrings; malaiyai ĕṭuttu You lifted Govardhana mountain as an umbrella; makiḻntu became excited; kāttu and protected the people; kal māri from the hale strom; pacunirai meyttāy! One who grazed the cattle; iṟuttāy! You broke the bow; cilai ŏṉṟu to marry Sita; tirivikkiramā! One who measured the earth!; tiru āyar pāṭip pirāṉe! Oh Lord of Aiyapadi!; kuṟṟame aṉṟe is it my fault!; viṭṭiṭṭeṉ to not; pĕrukkāte bore and insert threads in; uṉ kātai Your ears; talai nilā when You were a child; pote when Your head was still moving around