PAT 2.3.5

கருங்குழல்விட்டு (விஷ்ணு)

143 சோத்தம்பிரான் என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய் *
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ? நம்பீ! *
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே! திரியிடவொட்டில் *
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே! நீஇங்கேவாராய்
143 cottam pirāṉ ĕṉṟu irantālum kŏl̤l̤āy * curikuzhalārŏṭu nī poy *
kottuk kuravai piṇaintu iṅku vantāl * kuṇaṅkŏṇṭu iṭuvaṉo? nampī **
perttum pĕriyaṉa appam taruvaṉ * pirāṉe tiriyiṭa ŏṭṭil *
veyt taṭantol̤ār virumpum karuṅkuzhal * viṭṭuve nī iṅke vārāy (5)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

143. O dear child, even when I beg you and say i worship you, you don’t listen to me. How can I think you are a good child you join the curly-haired girls, dance the kuravai dance with them and come back late? O dear child, if you let me put the thread in your ears I will give you large appams even though you are naughty. You are the lord of the sky, O Vishnu! the girls with round bamboo-like arms love you whose hair is as dark as a cloud. Come here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சோத்தம் உன்னை வேண்டிக்கொள்கிறேன்; பிரான்! பெருமானே!; என்று இரந்தாலும் என்று இரந்து சொன்னாலும்; கொள்ளாய் ஏற்றுக் கொள்ளமாட்டாய்; நம்பீ! எம்பிரானே!; சுரிகுழலாரொடு சுருண்ட முடியையுடைய; நீ போய் பெண்களோடு நீ போய்; கோத்து கை கோத்து; குரவை பிணைந்து குரவைக் கூத்து ஆடி; இங்கு வந்தால் இங்கு வந்தால்; குணம் அதை நான் குணமாகக் கொள்வேனோ?; பிரானே! கண்ணனே!; திரி இட ஒட்டில் திரி போட்டுக் கொள்ள வந்தால்; பேர்த்தும் பின்னையும்; பெரியன அப்பம் பெரிய பெரிய அப்பங்களை; தருவன் தருவேன்; வேய்த் தடம் மூங்கில் போன்ற; தோளார் தடமான தோள்களையுடைய; விரும்பும் பெண்கள் விரும்பும்; கருங்குழல் கறுத்த தலைமுடியை உடைய; விட்டுவே! விஷ்ணு பிரானே!; நீ இங்கே வாராய் நீ இங்கே வாராய்
kŏl̤l̤āy You dont listen to me; ĕṉṟu irantālum even when I say sincerely; cottam that I pray to You; pirāṉ! Perumaney!; nampī! oh Lord!; nī poy if you go and meet with girls; curikuḻalārŏṭu who have curly hair; kottu join hands; kuravai piṇaintu and dance the kuravai dance; iṅku vantāl and come late; kuṇam how can I think You are a good child?; pirāṉe! Oh Lord!; tiri iṭa ŏṭṭil if you come to me so I can put threads in your pierced ears; perttum later; taruvaṉ I will give You; pĕriyaṉa appam large appams; virumpum You are loved by women having; veyt taṭam bamboo-like; tol̤ār arms; karuṅkuḻal the One with dark black hair; viṭṭuve! Oh Lord Vishnu!; nī iṅke vārāy You come here!