ஒன்பதாம் பாட்டு – திரு உந்தியின் அழகை அனுபவித்த அநந்தரம் – திரு உதரத்தின் அழகை அனுபவிக்கிறார் –
அதிரும் கடல் நிற வண்ணனை ஆச்சி மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து பதரப் படாமே பழம் தாம்பால் ஆர்த்த உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே -1-2-9-
பதவுரை
அதிரும்–கோஷிக்கின்ற கடல் நிறம்–கடலினது நிறம் போன்ற வண்ணனை–நிறத்தை யுடைய கண்ணனுக்கு (அடங்காப் பிள்ளைக்கு த்ருஷ்டாந்தம்