PAT 1.2.10

கௌஸ்துபம் திகழும் திருமார்பு

32 பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து * அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை *
குருமாமணிப்பூண் குலாவித்திகழும் *
திருமார்புஇருந்தவாகாணீரே சேயிழையீர்! வந்துகாணீரே.
32 pĕru mā uralil * piṇippuṇṭu iruntu * aṅku
iru mā marutam * iṟutta ip pil̤l̤ai **
kuru mā maṇippūṇ * kulāvit tikazhum *
tirumārpu iruntavā kāṇīre * ceyizhaiyīr vantu kāṇīre (10)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.2.10

Simple Translation

32. He (Kannan) pulled the huge mortar between two marudam trees and made them fall when Yashodā, tied Him to it. Come and see His chest ornamented with the shining Kaustubham ornament studded with large diamonds. O girls adorned with beautiful dresses, come and see His chest.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரு மா உரலில் மிகப்பெரிய உரலோடு; பிணிப்புண்டு இருந்து கட்டப்பட்டிருந்து; அங்கு இரு மா மருதம் அந்நிலையிலே இரு மருதமரங்களை; இறுத்த இப்பிள்ளை முறித்த இக்கண்ணபிரானுடைய; குரு மா மணிப்பூண் மிகச்சிறந்த கௌஸ்துப ஆபரணம்; குலாவித் திகழும் அசைந்தாடும்; திருமார்பு இருந்தவா திரு மார்பின் அழகை; காணீரே காண்பீரே!; சேயிழையீர்! சிறந்த வஸ்திரமணிந்ததுள்ள பெண்களே!; வந்து காணீரே! வந்து காணீரே!
aṅku iru mā marutam once, two great Marudha trees; iṟutta ippil̤l̤ai were tore down by Kannan; piṇippuṇṭu iruntu by going inbetween them being tied to; pĕru mā uralil a very large mortar; ceyiḻaiyīr! women dressed in beautiful clothes!; kāṇīre come and see!; tirumārpu iruntavā the beauty of His chest; kuru mā maṇippūṇ that has the great Kaustubha gem; kulāvit tikaḻum which is moving and shining; vantu kāṇīre! come and see!