PAT 1.2.12

சங்கு சக்கரம் நிலவும் கைத்தலங்கள்

34 மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற *
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை *
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய *
கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்துகாணீரே.
34 mait taṭaṅkaṇṇi * yacotai val̤arkkiṉṟa *
cĕyttalai nīla niṟattuc * ciṟuppil̤l̤ai **
nĕyttalai nemiyum * caṅkum nilāviya *
kaittalaṅkal̤ vantu kāṇīre * kaṉaṅkuzhaiyīr vantu kāṇīre (12)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.2.12

Simple Translation

34. Yashodā whose eyes are darkened with kohl, nurtures the dark blue-colored child. He carries in his hands a conch and a discus smeared with oil. Come and see his hands O girls wearing gold studs, come and see his hands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மைத் தடங்கண்ணி மையணிந்த பெரிய கண்களையுடைய; யசோதை வளர்க்கின்ற யசோதையால் வளர்க்கப்படுகின்ற; தலை செய் உயர்ந்த வயலிலே; நீல நிறத்து கருநெய்தல் பூ போன்ற நிறத்தையுடைய; சிறுப்பிள்ளை இளம்பிள்ளை; நெய்த்தலை கூர்மையான முனையுடைய; நேமியும் சங்கும் சக்கரமும் சங்கும்; நிலாவிய அமைந்துள்ள; கைத்தலங்கள் வந்து உள்ளங்கைகளை; காணீரே பாரீர்!; கனங்குழையீர்! தங்கக் காதணிகளையுடைய பெண்களே; வந்து காணீரே! வந்து காணீரே!
ciṟuppil̤l̤ai this young child, Kannan; nīla niṟattu with the complexion of a black weaving flower; talai cĕy on a grown field; yacotai val̤arkkiṉṟa was nurtured by Yashoda; mait taṭaṅkaṇṇi who has big eye-liner applied eyes; kaṉaṅkuḻaiyīr! o women with golden ear ornaments!; kāṇīre see; nemiyum caṅkum the conch and the discus; nĕyttalai with a sharp edges; nilāviya and located in; kaittalaṅkal̤ vantu His palms; vantu kāṇīre! come and see!