PAT 1.2.11

அசுரரை அழித்த திருத்தோள்கள்

33 நாள்களோர்நாலைந்து திங்களளவிலே *
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய் *
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான் *
தோள்கள்இருந்தவாகாணீரே சுரிகுழலீர்! வந்துகாணீரே.
33 nāl̤kal̤ or nālaintu * tiṅkal̤ al̤avile *
tāl̤ai nimirttuc * cakaṭattaic cāṭippoy **
vāl̤ kŏl̤ val̤ai ĕyiṟṟu * āruyir vavviṉāṉ *
tol̤kal̤ iruntavā kāṇīre * curikuzhalīr vantu kāṇīre (11)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.2.11

Simple Translation

33. When He was only four or five months old, He (Kannan) kicked and took the precious life of Sakatāsuran, who came in the form of a cart. He killed Putanā who had teeth sharp as swords. O girls with curly hair, come and see his shoulders. Come and see.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாள்கள் ஓர் நாலைந்து நாட்கள் ஒரு நாலைந்து; திங்கள் அளவிலே மாதங்கள் என்ற அளவில்; தாளை நிமிர்த்து காலைத்தூக்கி; சகடத்தைச் சாடிப் போய் சகடாசூரனை உதைத்துவிட்டு; வாள் கொள் ஒளியுடையதான; வளை வளைந்த; எயிற்று கோரப்பற்களையுடைய பூதனையின்; ஆருயிர் வவ்வினான் அரிய உயிரை முடித்த கண்ணன்; தோள்கள் இருந்தவா தோள்களின் அழகை; காணீரே பாருங்கள்; சுரிகுழலீர்! சுருண்ட கேசத்தையுடைய பெண்களே!; வந்து காணீரே! வந்து காணீரே!
nāl̤kal̤ or nālaintu when Kannan was four or five; tiṅkal̤ al̤avile months old; tāl̤ai nimirttu He lifted his legs; cakaṭattaic cāṭip poy and kicked the demon Sakatasura; āruyir vavviṉāṉ He ended the rare life of; ĕyiṟṟu Putanā with fearsome teeth; vāl̤ kŏl̤ that was shining and; val̤ai curved; curikuḻalīr! o women with curly hair!; kāṇīre see; tol̤kal̤ iruntavā the beauty of His shoulders; vantu kāṇīre! come and see!