PAT 1.2.13

உலகங்களை விழுங்கிய கழுத்து

35 வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு * வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு *
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய *
கண்டம்இருந்தவாகாணீரே காரிகையீர்! வந்துகாணீரே.
35 vaṇṭu amar pūṅkuzhal * āycci makaṉākak
kŏṇṭu * val̤arkkiṉṟa kovalak kuṭṭaṟku **
aṇṭamum nāṭum * aṭaṅka vizhuṅkiya *
kaṇṭam iruntavā kāṇīre * kārikaiyīr vantu kāṇīre (13)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.2.13

Simple Translation

35. The small cowherd child is raised by Yashodā whose lovely hair is adorned with flowers swarming with bees. See his neck that swallowed all the worlds and the sky. O beautiful girls, see his neck. Come and see his lovely neck. Come and see.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டமர் வண்டுகள் அமர்ந்திருக்கிற; பூங்குழல் பூவோடு கூடின கூந்தலையுடைய; ஆய்ச்சி யசோதைப் பிராட்டி; மகனாக கண்ணனை தன் புத்திரனாக; கொண்டு சுவீகரித்து; வளர்க்கின்ற வளர்க்கிற; கோவலர்க் குட்டற்கு நந்த கோபனின் குமாரனின்; அண்டமும் அண்டங்களையும் அவற்றினுள்ளே; நாடும் அடங்கியுள்ள சேத்னாசேதனங்களையும்; அடங்க விழுங்கிய முழுதும் விழுங்கிய; கண்டம் இருந்தவா திருக்கழுத்தைப்; காணீரே பார்ப்பீரே!; காரிகையீர்! அழகிய பெண்களே!; வந்து காணீரே! வந்து பாருங்கள்!
āycci Yashoda; pūṅkuḻal with hair adorned with flowers; vaṇṭamar swarmed with bees; kŏṇṭu raised; makaṉāka Kannan as her son; kārikaiyīr! o beautiful ladies!; kāṇīre see!; kaṇṭam iruntavā the divine neck; val̤arkkiṉṟa of the growing; kovalark kuṭṭaṟku Nanda Gopala’s son; aṭaṅka viḻuṅkiya that swallowed; nāṭum the entities contained; aṇṭamum within the universes; vantu kāṇīre! come and see!