(நலம் தான் இது ஓப்பது உண்டோ என்றவர் இது ஒன்றோ அவன் அடியாருக்குச் செய்யும் நன்மை அடியார்கள் இங்கே இருக்கும் நாள் இன்னது என்ற வரம்பு இல்லாமல் ஸர்வவித ரஷைகளும் பண்ணி சரீரம் விட்டால் ஸ்வர்க்கம் முதலான இன்பங்களையும் அதுக்கும் மேலே விலக்ஷணமான பரமபத இன்பத்தையும் கொடுத்து இவ்வளவும் செய்தாலும் இவன் செய்ததுக்குத் தக்க ஒன்றுமே செய்யப் பெற்றிலோமே என்று நெஞ்சாறல் பட்டு இருப்பவன் அன்றோ