NMT 82

கண்ணன் என் மனத்தில் கலந்துவிட்டான்

2463 கலந்தானென்னுள்ளத்துக் காமவேள்தாதை *
நலந்தானுமீதொப்பதுண்டே? * - அலர்ந்தலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் * என்றிவர்கள்
விட்டேத்தமாட்டாதவேந்து.
2463 kalantāṉ ĕṉ ul̤l̤attuk * kāma vel̤ tātai *
nalam tāṉum ītu ŏppatu uṇṭe? ** - alarntalarkal̤
iṭṭu ettum * īcaṉum nāṉmukaṉum * ĕṉṟivarkal̤
viṭṭu etta māṭṭāta ventu-82

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2463. The father of the beautiful Kama has entered my heart and lives there. Is there anything better than this could happen to me? Shivā and Nanmuhan sprinkle fresh flowers and worship the god, the king they cannot hope to equal.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காம வேள் மன்மதனுக்கு; தாதை தந்தையானவனை; அலர்ந்தலர்கள் மலர்ந்த மலர்களை; இட்டு ஏத்தும் கொண்டு துதிக்கும்; ஈசனும் நான்முகனும் ருத்ரன் பிரமன்; என்று இவர்கள் என்ற புகழ்பெற்ற இவர்கள்; விட்டு ஏத்த வாய்விட்டு; மாட்டாத துதிக்கமாட்டாத; வேந்து பெருமான்; என் உள்ளத்து என் உள்ளத்தில்; கலந்தான் கலந்தான்; ஈது ஒப்பது இந்த நன்மைக்கு ஈடான; நலம் தானும் வேறு நன்மை; உண்டே? உண்டோ?
kāmavĕl̤ thādhai one who is manmatha’s (cupid’s) father; alarndha alargal̤ ittĕththum īsanum sivan who praises emperumān after offering blossomed flowers; nānmuganum brahmā; enṛa ivargal̤ (distinguished) dhĕvas such as these; vittu ĕththa māttādha one who cannot be praised completely; vĕndhu dhĕvādhidhĕva (lord of all dhĕvas) [emperumān]; en ul̤l̤aththu in my heart; kalandhān mingled; īdhu oppadhu nalam thānum uṇdĕ is there any benefit equalling this benefit? (no, there is none).