MUT 95

திருமால் திருவடிகளையே வாழ்த்து

2376 புகுந்திலங்கும் அந்திப்பொழுதகத்து * அரியாய்
இகழ்ந்தவிரணியனதாகம் * சுகிர்ந்தெங்கும்
சிந்தப்பிளந்த திருமால்திருவடியே *
வந்தித்துஎன்நெஞ்சமே! வாழ்த்து.
2376 புகுந்து இலங்கும் * அந்திப் பொழுதத்து * அரியாய்
இகழ்ந்த * இரணியனது ஆகம் ** சுகிர்ந்து எங்கும்
சிந்தப் பிளந்த * திருமால் திருவடியே *
வந்தித்து என் நெஞ்சமே ! வாழ்த்து (95)
2376 pukuntu ilaṅkum * antip pŏzhutattu * ariyāy
ikazhnta * iraṇiyaṉatu ākam ** - cukirntu ĕṅkum
cintap pil̤anta * tirumāl tiruvaṭiye *
vantittu ĕṉ nĕñcame ! vāzhttu (95)

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2376. O heart, worship his divine feet and praise Thirumāl who went to Hiranyan in the evening as a man-lion and split open his chest with his sharp claws as his blood flew all over.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்திப் புகுந்து மாலைப் பொழுதாக; இலங்கும் இருக்கும்; பொழுதத்து சமயத்தில்; அரியாய் நரசிம்மனாய் வந்து; இகழ்ந்த தன்னை இகழ்ந்த; இரணியனது இரணியனின்; ஆகம் உடலை; சுகிர்ந்து பல கூறாக வகிர்ந்து; எங்கும் எங்கும்; சிந்த ரத்தம் சிந்தும்படியாக; பிளந்த பிளந்த; திருமால் திருமாலின்; திருவடியே திருவடிகளையே; என் நெஞ்சமே! என் மனமே!; வந்தித்து தலையால் வணங்கி; வாழ்த்து வாயார வாழ்த்துவாயாக
andhi pugundhu with dusk setting; ilangum pozhudhaththu at the time when it manifests; ari āy incarnating in the form of narasimha (lion head and human body); igazhndha iraṇiyadhu āgam the body of demon iraṇiyan (hiraṇya kashyap) who was constantly abusing emperumān; sugirndhu cutting it into many pieces; engum sindha dropping it all over the place; pil̤andha one who tore; thirumāl emperumān’s; thiruvadiyĕ only divine feet; en nenjamĕ ŏh my heart!; vandhiththu vāyāra vāzhththu bow the head and praise him fully.