MUT 94

மாயன் என் மனத்தில் என்றும் உள்ளான்

2375 உய்த்துணர்வென்னும் ஒளிகொள்விளக்கேற்றி *
வைத்து அவனைநாடிவலைப்படுத்தேன் * - மெத்தெனவே
நின்றானிருந்தான் கிடந்தானென்னெஞ்சத்து *
பொன்றாமைமாயன்புகுந்து.
2375 uyttu uṇarvu ĕṉṉum * ŏl̤i kŏl̤ vil̤akku eṟṟi *
vaittu avaṉai nāṭi valaippaṭutteṉ ** - mĕttĕṉave
niṉṟāṉ iruntāṉ * kiṭantāṉ ĕṉ nĕñcattu *
pŏṉṟāmai māyaṉ pukuntu -94

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2375. I light the lamp of knowing and feel him in my heart and keep him there. The Māyan, standing, sitting and lying in different temples, entered my heart and stays there always.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உணர்வு அறிவு பூர்வ உணர்வோடு எம்பெருமானே; என்னும் உபாயம் என்ற; ஒளி கொள் ஒளிமயமான; விளக்கு விளக்கு; ஏற்றி அவனை ஏற்றி அப்பெருமானை; உய்த்து வைத்து தேடிப் பிடித்து; நாடி ஆராய்ந்து கற்று பிடித்து; வலைப் படுத்தேன் வைத்துக் கொண்டேன்; மாயன் அந்த மாயப் பெருமான்; பொன்றாமை நான் அழியாமல் இருக்க; என் நெஞ்சத்து என் மனதில்; புகுந்து புகுந்து; மெத்தெனவே மெத்தென்று; நின்றான் முதலில் நின்றான்; இருந்தான் பிறகு வீற்றிருந்தான்; கிடந்தான் பின்பு பள்ளிகொண்டான்
uṇarvu ennum knowledge which is readily available; ol̤i kol̤ vil̤akku radiant lamp; ĕṝi lighting it; avanai uyththu vaiththu searching for emperumān; nādi analysing and meditating; valaippaduththĕn ī made him my own; māyan that emperumān; ponṛāmai without any break; en nenjaththu inside my heart; pugundhu entered; meththena slowly; ninṛān (initially) stood; irundhān (later) sat; kidandhān (after that) reclined and graced me