MUT 96

திருமாலை எல்லாத் தேவர்களும் வணங்குவர்

2377 வாழ்த்தியவாயராய் வானோர்மணிமகுடம் *
தாழ்த்திவணங்கத்தழும்பாமே * - கேழ்த்த
அடித்தாமரைமலர்மேல்மங்கைமணாளன் *
அடித்தாமரையாமலர்.
2377 vāzhttiya vāyarāy * vāṉor maṇi makuṭam *
tāzhtti vaṇaṅkat tazhumpāme ** - kezhtta
aṭit tāmarai * malarmel maṅkai maṇāl̤aṉ *
aṭit tāmarai ām alar -96

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2377. As the gods in the sky bow to him their jewel-studded crowns mark the lotus feet of the beloved of Lakshmi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேழ்த்த பெருத்த; அடி தளைகளையுடைய; தாமரைமலர் தாமரை மலர்; மேல் மேல் இருக்கும்; மங்கை திருமகளின்; மணாளன் நாதனான பெருமானின்; அடி ஆம் அழகிய திருவடி; தாமரை அலர் தாமரைகளை; வானோர் நித்யஸூரிகள்; வாயராய் வாயார; வாழ்த்திய வாழ்த்தி; மணி மணிகளிழைத்த; மகுடம் கிரீடத்தை; தாழ்த்தி தாழ்த்திப் பணிந்து; வணங்க வணங்குவதால்; தழும்பு அத்திருவடிகளில் தழும்பு; ஆமே ஏறிக் கிடக்கின்றன
kĕzhththa adi having huge stem; thāmarai malar mĕl one who is sitting on the lotus; mangai periya pirātti’s; maṇāl̤an consort emperumān’s; adi ām thāmarai alar divine feet which are like lotus flowers; vānŏr nithyasūris [permanent dwellers of ṣrīvaikuṇtam]; vāzhththiyvāyarāy praising with their mouths; maṇi magudam crowns studded with gemstones; thāzhththi lowering; vaṇanga since they worship; thazhumbu āmĕ (those divine feet) have got scarred.