MUT 85

தெவிட்டாத பேரழகு உடையவன் கண்ணன்

2366 கவியினார்கைபுனைந்து கண்ணார்கழல்போய் *
செவியினார்கேள்வியராய்ச்சேர்ந்தார் * - புவியினார்
போற்றியுரைக்கப் பொலியுமே? * - பின்னைக்காய்
ஏற்றுயிரையட்டானெழில்.
2366 kaviyiṉār kai puṉaintu * kaṇ ār kazhal poy *
cĕviyiṉ ār kel̤viyarāyc cerntār ** - puviyiṉār
poṟṟi uraikkap * pŏliyume * piṉṉaikku āy
eṟṟu uyirai aṭṭāṉ ĕzhil? 85

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2366. In their poetry, poets worship the lord, describing the beauty of his form, and the devotees hear them and come to worship him in all his temples. Even if the poets and the people of the world praise the beauty of the lord who conquered the seven bulls to marry Nappinnai, will their words be enough to praise his divine shining beauty?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கவியினார் கவிஞர்கள் பாடல்களால்; கை புனைந்து அஞ்சலி செய்து; கண்ணார் கண்களை; கழல் போய் திருவடிகளில் பதித்து; செவியினார் காதார அவன் பாடல்களை; கேள்வியராய் கேட்டு வணங்கி; சேர்ந்தார் ஒன்று சேர்ந்து; புவியினார் பூமியிலுள்ளோர் எல்லோரும்; போற்றி அவன் பெருமைகளை புகழ்ந்து; உரைக்க பாடினாலும்; பின்னைக்கு ஆய் நப்பின்னைக்காக; ஏற்று உயிரை எருதுகளின் உயிரை; அட்டான் எழில் மாய்த்த பெருமானின் அழகை; பொலியுமே? சிறப்புறச் சொல்லப்பட்டதாகுமோ?
kaviyinār those who worship with hymns in praise; kai punaindhu joining the plams together in anjali pose; kaṇ their eyes; ār kazhal pŏy getting to (his) fulsome divine feet; seviyinār kĕlviyarāy being as people with lot of knowledge through listening [to gyānis, wise people]; sĕrndhār those who join together; puviyinār people of this world; pŏṝi uraikka even if they sing in praise (together); pinnaikkāy ĕṛu uyirai attān ezhil poliyumĕ will it mean that the beauty of emperumān, who killed seven bulls for winning the hand of nappinnaip pirātti, has been greatly described? (no, it will not)