MUT 81

நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமான் திருமாலே

2362 நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைபெற்றுஎன்
நெஞ்சமே! பேசாய் நினைக்குங்கால் * நெஞ்சத்துப்
பேராதுநிற்கும் பெருமானை, என்கொலோ? *
ஓராதுநிற்பதுணர்வு.
2362 nĕñcāl * niṉaippu ariyaṉelum * nilaippĕṟṟu ĕṉ
nĕñcame pecāy * niṉaikkuṅkāl ** - nĕñcattup
perātu niṟkum * pĕrumāṉai ĕṉ kŏlo *
orātu niṟpatu uṇarvu. 81

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2362. O my firm heart, even though it is difficult to think of him, think and praise him without worrying. He is in you and will not move from there. Why are you unable to know him. ? Why do you do not feel him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சமே! என் மனமே!; நெஞ்சால் மனதாலும் நினைக்கமுடியாத; அரியனேலும் பெருமையுடையவனும்; நினைப்பு அவன் எளிமையை நினைத்து; நிலைப்பெற்று நிலைபெற்று; பேசாய் அவனைப் பற்றி சிந்திப்பாயாக; நினைக்குங்கால் எப்பொழுது நினைத்தாலும்; நெஞ்சத்து பேராது மனதை விட்டு நீங்காமல்; நிற்கும் நிலைத்து நிற்கும்; பெருமானை பெருமானை; உணர்வு நம் உணர்வு மனம் அவனை; ஓராது நினைக்காமல்; நிற்பது வாளாக இருப்பது; என் கொலோ ஏனோ?
en nenjame ŏh my heart who is under my control!; nenjāl ninaippu ariyan ĕlum even though (emperumān) has greatness beyond the thinking ability of heart; nilaip peṝu standing firmly; pĕsāy try to talk about him; ninaikkungāl if we think of him even once; nenjaththu in the heart; pĕrādhu niṛkum standing firmly without leaving it; perumānai about emperumān; uṇarvu our heart; ŏrādhu niṛpadhu en kolŏ why is keeping quiet without thinking?