MUT 82

உணரவும் காணவும் அரியவன் திருமால்

2363 உணரிலுணர்வரியன் உள்ளம்புகுந்து *
புணரிலும்காண்பரியனுண்மை * - இணரணையக்
கொங்கணைந்துவண்டறையும் தண்துழாய்க்கோமானை *
எங்கணைந்துகாண்டும்இனி?
2363 uṇaril uṇarvu ariyaṉ * ul̤l̤am pukuntu *
puṇarilum kāṇpu ariyaṉ uṇmai ** - iṇar aṇaiyak
kŏṅku aṇaintu vaṇṭu aṟaiyum * taṇ tuzhāyk komāṉai *
ĕṅku aṇaintu kāṇṭum iṉi? 82

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2363. If you want to be aware of him it is hard and it is impossible for you to see him even if he enters your heart. Where can I go to see the lord, the king adorned with a cool thulasi garland swarming with bees and dripping with honey?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உணரில் நாமாக அறிய முயன்றாலும்; உணர்வு அரியன் அவன் அறியவொண்ணாதவன்; உள்ளம் அவன் தானே வந்து மனதில்; புகுந்து புகுந்து; புணரிலும் அணைந்தாலும்; உண்மை உள்ளபடி; காண்பு அரியன் அறியமுடியாதவன்; இனி இணர் பின்பு தாழ்ந்த; அணையை பூக்களிலுள்ள; கொங்கு தேனை; வண்டு வண்டுகள் வந்து; அணைந்து சேர்ந்து பருகி; அறையும் ரீங்கரிக்க; தண் துழாய் துளசிமாலை அணிந்த; கோமானை பெருமானை; எங்கு இனி நாம் எங்கு சென்று; அணைந்து அவனை அடைந்து; காண்டும் காண முடியும்
uṇaril if we try to know (about emperumān, on our own); uṇarvariyan he cannot be known; ul̤l̤am pugundhu puṇarilum comes into the heart and embraces; uṇmai kānbu ariyan difficult to know ’as he is’; ini when things are like this; iṇan aṇaiya such that bunches of flowers to be lowered; kongu in honey; vaṇdu beetles; aṇaindhu approaching and entering (and drinking honey); aṛaiyum humming; thaṇ cool; thuzhāy one who is donning the thul̤asi garland; kŏmānai that supreme being; ini in this state; engu in which place; aṇaindhu approaching; kāṇdum will be able to see?