புருஷ: ஸ பர: பார்த்த₂ ப₄க்த்யா லப்₄யஸ் த்வநந்யயா|
யஸ்யாந்தஸ்ஸ்தா₃நி பூ₄தாநி யேந ஸர்வமித₃ம் ததம்|| (8-22)
பார்த்த₂ - குந்தீபுத்திரனே!, பூ₄தாநி - எல்லாப் பொருள்களும், யஸ்ய - எந்தப் பரமபுருஷனுடைய, அந்தஸ்ஸ்தா₃நி - உள்ளேயிருக்கின்றனவோ, யேந - எவனால், ஸர்வம் இத₃ம் - இது அனைத்தும், ததம் - வியாபிக்கப்பட்டுள்ளதோ, ஸ பர: புருஷ: து - அந்தப் பரமபுருஷனோவெனில், அநந்யயா ப₄க்த்யா - வேறு பயன் கருதாத ப₄க்தியினால், லப்₄ய: - அடையத்தக்கவன்.