புருஷ: ஸ பர: பார்த்த2 ப4க்த்யா லப்4யஸ் த்வநந்யயா|
யஸ்யாந்தஸ்ஸ்தா3நி பூ4தாநி யேந ஸர்வமித3ம் ததம்|| (8-22)
பார்த்த2 - குந்தீபுத்திரனே!, பூ4தாநி - எல்லாப் பொருள்களும், யஸ்ய - எந்தப் பரமபுருஷனுடைய, அந்தஸ்ஸ்தா3நி - உள்ளேயிருக்கின்றனவோ, யேந - எவனால், ஸர்வம் இத3ம் - இது அனைத்தும், ததம் - வியாபிக்கப்பட்டுள்ளதோ, ஸ பர: புருஷ: து - அந்தப் பரமபுருஷனோவெனில், அநந்யயா ப4க்த்யா - வேறு பயன் கருதாத ப4க்தியினால், லப்4ய: - அடையத்தக்கவன்.