verse 226

[1] தேவிமார் பணியா நேர்பட்ட நல்ல கோட்பாடு என்னும்படி சக்தியாலே நித்யமாகக் கல்பித்த பத்நீ பரிஜநாதிகளையுடைய ஸத்யகாமன் கொண்ட வாக் வ்ருத்தியையும் மறப்பிக்கும் கலக்கமும் சங்கையும் அச்சமும்தீர,

[2] தலைச்சிறப்பத் தந்தவதில் க்ருதஜ்ஞதா பலப்ரத்யுபகாரமாக வேந்தர் தலைவன் கந்யகா தாநம்போலே ஆரத்தழுவி அறவிலை செய்த ஆத்ம லாபத்தாலே அதீவ விளங்கிப் பணைத்து [3] ஜந்மபாசம்விட்டு ஆத்வாரம் ஆளுமாளாரென்று பரிந்து அநுரூபனோடே அமர்ந்து பிரிவில் க்ருபண தசையாகத் துவரும் ஸீதா குணங்களாலே ப்ரீதி வர்த்தித்து, [4] தித்திக்க வுள்ளே உறைந்து கண்டுகொண்டிருந்து அமாநுஷ போகமாக்கினவன்

[5] மூன்று தத்துக்குப் பிழைத்த அருவினை நோய் மறுவலிடாமல் சிறியேனென்றதின் பெருமையைக் காட்ட [6] தேஹாதிகளில் பரமாய் நின்று நினைக்கில் லக்ஷ்மீ துல்யமாய் அவர்க்கே குடிகளாம் பரதந்த்ர ஸ்வரூபத்தை யநுஸந்தித்தவர் [7] ஸ்வஸாதந ஸாத்யஸ்தர் இருகரைய ராகாமல் மண்ணவரும் வானவரும் நண்ணுமத்தையே குறிக்கொண்மின்

உள்ளத்தென்று ப்ராப்யைக பரராக்குகிறார் எட்டாம்பத்தில்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo