[1] எண்டிசையும் அகல்ஞாலம் எங்குமளிக்கின்றஆலின்மேலென்னும்படி
நித்யபோகபாத லீலோபகரணத்தின் லயாதிகளைப் போக்கும் ஆபத்ஸகன் [2] ஆருயிரென்னப்படுத்தின ஆத்ம தர்சந பலாநுபவ பரம்பரையைக் கூவுதல் வருதலென்று முடுகவிட்டு [3] ஏகமெண்ணிக் காணக் கருதி எழ நண்ணி நினைதொறு முருகியலற்றிக் கவையில் மனமின்றிப் பதினாலாண்டு பத்து மாஸமொரு பகல் பொறுத்தவர்கள் ஒரு மாஸ தின ஸந்த்யையில் படுமது க்ஷணத்திலேயாகவிரங்குகிற த்வரைக்கீடாக [4]
இனிப்பத்திலொன்று தசம தசையிலே பேறென்று நாட்கடலாகத் தம்பிக் கிட்டதாகாமல் நாளை வதுவைபோலே நாளிடப் பெற்றவர்,[5] இம்மடவுலகர் கண்டதோடு பட்ட அபாந்தவாரக்ஷகாபோக்யாஸுகாநுபாய ப்ரதி ஸம்பந்தியைக் காட்டி [6] மற்றொன்று கண்ணனல்லாலென்கிற வைகல் வாழ்தலான ஸித்தோபாயம், [7] அதில் துர்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலைமாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம் ஸாங்கபக்தி, அதில் அசக்தர்க்குத் தாளடையும் ப்ரபத்தி, [8]அதில் அசக்தர்க்கு உச்சாரண
மாத்ரம், ஸர்வோபாய சூந்யர்க்கு இப்பத்தும் பாடியிடும் தெண்டனென்று கீதாசார்யனைப் போலே அதிகாராநுகுணம் நெறியெல்லா முரைக்கிறார் ஒன்பதாம்பத்தில்.