verse 225

[1] எண்ணிலாக் குணங்கள் பால துன்பவேறவன் மாயாப் பல்யோகு

செய்தியென்னும் ஆச்சர்ய சக்தியோகத்தாலே [2] தெளிவுற்றவர்க்கு ஏற்றரும் வைகுந்தத்தையருளும் ப்ராபகத்வம் புற்பாவெறும்பு பகைவனுக்கும் ஆக்கவல்ல ஸர்வ சக்தி, பாதமகலகில்லாத தம்மை

[3] அகற்றுமவற்றின் நடுவேயிருத்தக் கண்டு நலிவான் சுமாடு தந்தாய் ஓவென்று ஸாதநபலமான ஆக்ரோசத்தோடே பழியிட்டுக் [4] கங்குலும் பகலும் அடைவற்ற ஆர்த்தியைக் கோயில் திருவாசலிலே முறை கெட்ட கேள்வியாக்கித் [5] தேற்றவொண்ணாதபடி தோற்று ஒன்றி நிற்கப் பண்ணின பலாதாரம் மற்றுங் கற்பாரிழவிலே சுவறிப் [6] பழைய தனிமைக் கூப்பீடு தலையெடுத்து, சூழவும் பகைமுகஞ்செய்ய, எடுப்புஞ்சாய்ப்புமான க்லேசம் நடக்க, உபாயாதிகாரதோஷமொழிய மாயங்கள் செய்து வைத்த வைசித்திரியைக் கேட்க, [7] ஐச்சமாக இருத்தி உறக்கொண்ட ஸ்வபர ப்ரயோஜனத்தை அருளிச்செய்ய, என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பெதிர் எதுவும்மென்கிற உபகார ஸ்ம்ருதியோடே [8] தன் சரிதை கேள்வியாகாமல் இன்பம் பயக்கவிருந்த நிலத்தேவர் குழுவிலே பாட்டுக் கேட்பிப்பதாக காநகோஷ்டியையும் தேவபிரானறிய மறந்தவர், [9] சரமோபாய பரரானார்க்கு நீணகரமது, துணித்தான் சரணன்றி மற்றொன்றிலம் உள்ளித் தொழுமினென்று ப்ராப்ய ஸாதநாவதியை ப்ரீதியாலே ப்ரகாசிப்பிக்கிறார் ஏழாம் பத்தில்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo