[1] என்னையும் யாவர்க்கும் சுரர்க்காய் அடியீர் வாழ்மினென்று கருணையாலே "ஸர்வலோக பூதேப்ய:" என்றவை கடலோசையும் கழுத்துக்கு மேலுமாகாமல் உபாயத்வம் கல் வெட்டாக்குகிற சரண்யன்
[2] அஜ்ஞாநாசக்தி யாதாத்ம்ய ஜ்ஞாநங்களளவா லன்றிக்கே அங்குற்றேன் என்னான் புணரா யென்னும்படி மெய்யமர் பக்தி பூம பலமாகவும் அநந்ய கதித்வமுடைய தமக்குப் [3] பாதமே சரணாக்க அவையே சேமங்கொண்டு ஏகசிந்தையராய் திர்யக்குக்களையிட்டு ஸ்வாபிப்ராயத்தை நிவேதித்து விளம்ப ரோஷம் உபாயத்தாலேயழிய, [4] உருகாமல் வரித்ததும் நண்ணி வணங்க பலித்தவாறே ஸப்ரகாரமாக ஸக்ருத் கரணீயமென்று புராண பௌராணிகர் த்யாஜ்யாம்சமாக்கின [5] சிதசித் ப்ராப்ய ப்ராபகா பாஸங்களைக் கைவலிந்து கைகழலக் கண்டும் எல்லாம் கிடக்க நினையாதகன்றும் ஆளீர் மேவீர் ஊதீர் என்று ததீய சேஷமாக்கியும், புறத்திட்டுக் காட்டியென்று, ப்ரஸங்கிக்கில் முடியும்படிவிட்டு, [6] தந்தை தாய் உண்ணுஞ்சோறு மாநிதி பூவையாவையு மொன்றேயாக்கி, [7] தளர்வேனோ திரிவேனோ குறுகாதோ முதல்வாவோ வென்னுமார்த்தியோடே
[8] திரிவிக்கிரமனாகக் குறள் கோலப்பிரானாய் அடியை மூன்றையிரந்த வன் கள்வன் கண்முகப்பே அகல்கொள் திசை வையம் விண்ணும் தடவந்த தடந்தாமரைகளை [9] இணைத் தாமரைகள் காண இமையோரும் வரும்படி சென்று சேர்ந்த உலகத்திலதத்தே கண்டு அகலகில்லேனென்று பூர்வவாக்ய மநுஸந்தித்தவர், [10] பிணக்கறத் தொடங்கி வேதப்புனிதவிறுதி சொன்ன ஸாத்யோபாய ச்ரவண ஸசோக ஸஜாதீயர்க்கு, [11] தந்தனன் மற்றோர் களைகணிலம் புகுந்தேனென்று ஸ்வஸித்தோபாய நிஷ்டையை உக்த்யநுஷ்டாநங்களாலே காட்டுகிறார் ஆறாம் பத்தில்.