verse 223

[1] ஆவாவென்று தானே தன்னடியார்க்குச் செய்யும் தொல்லருளென்று

பரத்வாதிகளையுடையவன் எவ்விடத்தானென்னும் பாவியர்க்கும் இருகரையுமழிக்கும் க்ருபா ப்ரவாஹமுடையவன் பொய்கூத்து வஞ்சக்களவு தவிர முற்றவுந்தானாய் உன்னை விட்டென்னப் பண்ணின விரக்தி பல பரமாத்ம ராகம். [2] பேரமர் பின்னின்று கழியமிக்கு யானேயென்ன வாய்ந்து ஆற்றகில்லாது நீராய் மெலிய ஊடு புக்கு வளர, [3] விஷ வ்ருக்ஷ பலங்கள் கைகூடினவர் அடிமை புக்காரையும் ஆட்செய்வாரையுங் காண லோக த்வீபாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குழாங்களைக் கண்டு காப்பிட்டு, ப்ரஹ்லாத விபீஷணர் சொற்கேளாத அரக்கரசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து, [4] தேச கால தோஷம் போக எங்குமிடங் கொண்டவர்களை மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள், நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை, [5] மேவிப் பரம்புமவரோடொக்கத் தொழில் யுக தோஷ மில்லையாமென்று விஷ்ணுபக்தி பரராக்கிக் கண்ணுக்கினியன காட்டலாம் படியானார். கண்ணிலே நோக்கிக் காணும் பக்தி ஸித்தாஞ்ஜனத்தை யிடுகிறார் அஞ்சாம்பத்தில்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo