verse 222

(1) ஈசனையீச னீசன் பாலென்ன ஏர்கொள்வானத்தும் ஆயேயென்கிற வ்யாப்தி நிறம் பெறத் தனிக்கோல் செலுத்தும் ஸர்வ நியந்தா, ஒழிவில் காலத்துக்குச் சேரப் பூர்வபோகங்களை யோதுமாலெய்தின சாபலத்துக்குச் சேர ஸமகாலமாக்கிப் [2] போதால் வணங்காமை தீர்த்த ப்ரணயித்வத்திலே காதல் மையல் ஏறிய பித்தாய். [3] தேசதூரத்துக்குக் கூவியுங் கொள்ளா யென்றது தீரக் கண்ட சதிரையும் ஒரு நிலமாகக் காட்ட, வீவிலின்பம் கூட்டினையென்று முக்தபோக மாநஸ ப்ராப்தி பலமான தேவதாந்தர

ஆத்மாத்மீய லோக யாத்ரைஸ்வர்யாக்ஷரங்களில் வைராக்யம், உன்னித்து

உயிருடம்பினால் கொடுவுலகம் வேட்கையெல்லா மொழிந்தேனென்ன வுடையரானவர், [4] ஒரு நாயகமென்று ராஜ்ய ஸ்வர்க்காத்மாநுபவ அல்பாஸ்திரத்வ ஸாவதிகத்வாதிகளையும், [5] ஆடு கள்ளிறைச்சி கருஞ்செஞ்சோறாகிற நிந்த்யங்களாலே இளந்தெய்வத்துக்கு இழைத்தாடும் நிஹீநதையையும், [6] பேச நின்ற தேவதாஜ்ஞாநா சக்தி ஸாபேக்ஷத் வாதிகளையும் [7] இலிங்கத்து விளம்பும் பாஹ்ய குத்ருஷ்டி மத தமோ நிஷ்டதையையும் சொல்லி, ஓடிக்கண்டீர் (8) கண்டும் தெளியகில்லீர் அறிந்தோடுமின் ஆட்செய்வதே உறுவதாவதென்று விரக்தி பூர்வகமாக ஆச்ரயணத்தை ருசிப்பிக்கிறார் நாலாம்பத்தில்.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo