[1] முழுதுமாய் எங்கணுமொழிவற அருவாகி நின்று தோய்விலனாம் ஸர்வ வ்யாபகன் தீர்ந்தவடியார்களைத் தாளிணைக்கீழ்க் கொள்ளும் தன் படிக்கும், (2) நீ தந்த மாமாயப் புணர்வினைப் பிறப்பழுந்தி அலமருகின்றேன் வேரறவரிந்து எந்நாளெங்கு வந்து தலைப்பெய்வனென்று கழித்துப் புகும் தங்காதலுக்கும் ஸத்ருசமாகக் கண்டு கொள்ளென்னும், [3] ஊனமில் மோக்ஷ பலமான முடிச்சோதியிலநுபவத்தாலே நித்ய வஸ்து நீடு பெற்று அவச்சேதமற்றவடிமை செய்யவேண்டும்படி ஸர்வாத்மபாவத்தைப் புகழ்ந்து, [4] சொல்லிப் பாடியேத்திப் பிதற்றி யெழுந்தும் பறந்தும் துள்ளிக் குதித்துத்
தடுகுட்டக் கும்பிடு நட்டமிட்டுச் சிரிக்கக் குழைந்து நையும் ப்ரீதீயுகளத் தம்மடியாரென்ன உடன்கூடும் ஸாத்யம் வளர, [5] பைகொள் பாம்பு போலே இந்த்ரிய வ்ருத்தி நியமமறப் பாடவந்த கவியன்றிக்கே படைத்தான் ச்லோக க்ருத்தாய், [6] குறைமுட்டுப் பரிவிடர் துயர் துன்பமல்லல் துக்கம் தளர்வு கேடுக ளின்றி அம்ருதாநந்த மக்நரானவர், செய்யதாமரைக் கண்ணன் அமரர் குலமுதலென்று அஞ்சாதபடி எளிவருமிணைவனா மென்றவை பரத்வமாம்படி, [7] அவனாகும் ஸௌலப்ய காஷ்டையைக் காட்டி, வழியைத் தருமவன் நிற்க இழியக் கருதுவதென்னாவது, வேண்டிற்றெல்லாம் தரும், தன்னாகவே கொள்ளும், கவி சொல்லவம்மினென்று,[8] முக்தைச்வர்யத்தை முன்னிட்டு ச்வவ்ருத்தியை மாற்றி ஸ்வவ்ருத்தியிலே மூட்டுகிறார் மூன்றாம் பத்தில்.