[1] சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவனென்கிற சிதசித் த்ரய த்ரிவித காரணமானவன் அறியாதனவறிவிக்க, உள்ளம் தேறித் தூமனம் மருளிலென்னும் ஜ்ஞாந பலமான வெளிக்கொண்ட மோக்ஷம் தேடி வாட, [2] உலராமலாவி சேர்ந்து சிக்கெனப் புகுந்து ஸம்பந்திகளும் சேர்தல் மாறினரென்ன வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மாவீட்டை உபயாநுகுணமாக்கினவர், [3] ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற ஸகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷசாயித்வ ச்ரிய:பதித்வ ஸௌலப்யாதிகளைத் திண்ணனணைவதென்று வெளியிட்டு, [4] கள்வா தீர்த்தனென்று வசன ப்ரத்யக்ஷங்களுங் காட்டி, [5] புலனைந்தென்று ஸம்ஸார மோக்ஷ ஸாதந்துக்காநந்த ரஸம் முன்னாக விதிக்கிற அந்தர்கத குணோபாஸநத்தை [6] மதித்துப் பெருக்கி மூழ்கியழுந்திக் கீழ்மை வலஞ் சூதுஞ் செய்து இளமை கெடாமல் செய்யும் க்ஷேத்ர வாஸ ஸங்கீர்த்தநாஞ்ஜலி ப்ரதக்ஷிணகதி சிந்தநாத்யங்க யுக்தமாக்குகிறார் இரண்டாம் பத்தில்.