பரபரனாய் நின்ற வளவேழ்வைப்பா மவையுளும்பர் வானவரதிபதி, மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி; மறக்குமென்று நல்கிவிடாதே மன்ன, அயர்ப்பில னறுத்தேன் என் சொல்லி மறப்பனோவென்னும்படி தத்வஜ்ஞரானவர்; சுடரடி யெம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானுமென்கிற ஸஹ்ருதயாநுபவம் ஸம்ஸாரிகளுக்குமாம்படி; வீடுமினென்று த்யாஜ்யோபாதேய தோஷ குண பரித்யாக ஸமர்ப்பண க்ரமத்தை ஸாலம்பந மந்த்ரமாக வுபதேசித்து; எளிதாக அவதரித்துப் பிழைகளை ஸஹித்துப் புரையறக் கலந்து அல்ப ஸந்துஷ்டனாய் அம்ருதமே ஒளஷதமாக்கி: நீர்புரையத் தன்னை நியமித்து போகத்தை ஸாத்மிப்பித்து பக்தி கணநைகளுக்கு ஒக்க வருமவனுடைய ஸேவைக்கு எளிமையும் இனிமையுமுண்டு, தொழுதால் அரும்பயனாய தரும், உத்யோகத்தே வினைகளும் மாளும், அவனுரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற வுணர்வு கொண்டு நலஞ்செய்வதென்று தாம் மயர்வற மதிநலமருளி பஜநத்திலே சேர்க்கிறார் முதற்பத்தில்.