verse 85

ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவு கொடுத்துக் குலதைவத்தோடொக்கப் பூஜை கொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனாமென்கிற திருமுகப்படியும், விச்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள்கலந்து தொழு குலமானவன் நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும், கீழ்மகன் தலைமகனுக்கு ஸமஸகாவாய்த் தம்பிக்கு முன் பிறந்து வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத் தமையனுக்கு இளையோன் ஸத்பாவம்

சொல்லும்படி ஏககுலமானமையும், தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹபோஜனமும், ஒரு பிறவியிலே இரு பிறவியானார் இருவர்க்கு தர்மஸூநு ஸ்வாமிகள் அக்ரபூஜை கொடுத்தமையும், ஐவரில் நால்வரில் மூவரில் முற்பட்டவர்கள் ஸந்தேஹியாமல் ஸஹஜரோடே புரோடாசமாகச் செய்த புத்ர க்ருத்யமும்,

புஷ்ப தியாக போக மண்டபங்களில் பணிபூவும் ஆலவட்டமும் வீணையும் கையுமான அந்தரங்கரை முடிமன்னவனும் வைதிகோத்தமரும் மஹாமுனியும் அனுவர்த்தித்த க்ரமமும் யாகானுயாகோத்தர வீதிகளில் காயாந்ந ஸ்தல ஷுத்தி பண்ணின வருத்தாசாரமும் அறிவார்க்கிறே ஜந்மோத்கர்ஷாபகர்ஷம் தெரிவது.

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo