குருசிஷ்ய க்ரந்தவிரோதங்களைப் பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செந்தமிழின் கவி பரவி யழைக்குமென்று அந்யோந்யம் கொண்டாடிப் பேசிற்றே பேசுமேக கண்டரில் என்னில் மிகுமென்னு மிவ ருரைகொளின் மொழி கொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே வலங்கொண்ட விதுக்குச் சேராதவை மநு விபரீதங்கள் போலே.