Chapter 7

The exquisite beauty of the Lord as anchor, Āzhvār sends birds as messengers to Thiru MoozhikkaLam - (எம் கானல்)

எம்பெருமானது வடிவழகே பற்றுக்கோலாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)
Desire to see Bhagavān increases as Āzhvār constantly meditates upon His auspicious qualities. Āzhvār as parānkusa nāyaki, sends out emissaries such as the stork/crane, the kurugu bird and the like to Thiru MoozhikkaLam emperumān asking them to inform Him, “Do tell Him that parānkusa nāyaki, as one who is completely immersed in your exquisite beauty, cannot live being separated from you.”
பகவானின் குணங்களை நினைக்க நினைக்க அவனை நேரில் காணவேண்டும் என்ற விருப்பம் ஆழ்வாருக்கு ஏற்படுகிறது. “உம்முடைய வடிவழகில் ஈடுபட்ட பராங்குசநாயகி உம்மைப் பிரிந்து தரித்திருக்கத் தக்கவளல்லள் என்று சொல்லுங்கள்” எனக் கூறி, திருமூழிக்களத்து எம்பெருமானிடம் நாரை, குருகு முதலியவற்றைத் தூது விடுகிறார் + Read more
Verses: 3739 to 3749
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: நட்டராகம்
Timing: 12.00- 1.12 PM
Recital benefits: their sicknesses will go away
  • TVM 9.7.1
    3739 ## எம் கானல் அகம் கழிவாய் * இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் *
    செங்கால மட நாராய்! * திருமூழிக்களத்து உறையும் **
    கொங்கு ஆர் பூந் துழாய் முடி * எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் *
    நும் கால்கள் என் தலைமேல் * கெழுமீரோ நுமரோடே (1)
  • TVM 9.7.2
    3740 நுமரோடும் பிரியாதே * நீரும் நும் சேவலுமாய் *
    அமர் காதல் குருகு இனங்காள்! * அணி மூழிக்களத்து உறையும் **
    எமராலும் பழிப்புண்டு * இங்கு என் தம்மால் இழிப்புண்டு? *
    தமரோடு அங்கு உறைவார்க்குத் * தக்கிலமே? கேளீரே (2)
  • TVM 9.7.3
    3741 தக்கிலமே கேளீர்கள்! * தடம் புனல்வாய் இரை தேரும் *
    கொக்கு இனங்காள்! குருகு இனங்காள்! * குளிர்மூழிக்களத்து உறையும் **
    செக்கமலத்து அலர் போலும் * கண் கை கால் செங்கனி வாய் *
    அக் கமலத்து இலை போலும் * திருமேனி அடிகளுக்கே (3)
  • TVM 9.7.4
    3742 திருமேனி அடிகளுக்குத் * தீவினையேன் விடு தூதாய் *
    திருமூழிக்களம் என்னும் * செழு நகர்வாய் அணி முகில்காள் **
    திருமேனி அவட்கு அருளீர் * என்றக்கால் உம்மைத் தன் *
    திருமேனி ஒளி அகற்றித் * தெளி விசும்பு கடியுமே? (4)
  • TVM 9.7.5
    3743 தெளி விசும்பு கடிது ஓடித் தீ * வளைத்து மின் இலகும் *
    ஒளி முகில்காள்! * திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு **
    தெளி விசும்பு திருநாடாத் * தீவினையேன் மனத்து உறையும் *
    துளி வார் கள் குழலார்க்கு * என் தூது உரைத்தல் செப்புமினே (5)
  • TVM 9.7.6
    3744 தூது உரைத்தல் செப்புமின்கள் * தூ மொழி வாய் வண்டு இனங்காள் *
    போது இரைத்து மது நுகரும் * பொழில் மூழிக்களத்து உறையும் **
    மாதரைத் தம் மார்வகத்தே * வைத்தார்க்கு என் வாய் மாற்றம் *
    தூது உரைத்தல் செப்புதிரேல்! * சுடர் வளையும் கலையுமே (6)
  • TVM 9.7.7
    3745 சுடர் வளையும் கலையும் கொண்டு * அருவினையேன் தோள் துறந்த *
    படர் புகழான் * திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண் **
    சுடர் பவள வாயனைக் கண்டு * ஒருநாள் ஓர் தூய் மாற்றம் *
    படர் பொழில்வாய்க் குருகு இனங்காள்! * எனக்கு ஒன்று பணியீரே. (7)
  • TVM 9.7.8
    3746 எனக்கு ஒன்று பணியீர்கள் * இரும் பொழில்வாய் இரை தேர்ந்து *
    மனக்கு இன்பம் பட மேவும் * வண்டு இனங்காள் தும்பிகாள் **
    கனக்கொள் திண் மதிள் புடை சூழ் * திருமூழிக்களத்து உறையும் *
    புனக்கொள் காயா மேனிப் * பூந் துழாய் முடியார்க்கே (8)
  • TVM 9.7.9
    3747 பூந் துழாய் முடியார்க்குப் * பொன் ஆழிக் கையாருக்கு *
    ஏந்து நீர் இளம் குருகே! * திருமூழிக் களத்தாருக்கு **
    ஏந்து பூண் முலை பயந்து * என் இணை மலர்க் கண் நீர் ததும்ப *
    தாம் தம்மைக்கொண்டு அகல்தல் * தகவு அன்று என்று உரையீரே (9)
  • TVM 9.7.10
    3748 தகவு அன்று என்று உரையீர்கள் * தடம் புனல்வாய் இரை தேர்ந்து *
    மிக இன்பம் பட மேவும் * மென் நடைய அன்னங்காள் **
    மிக மேனி மெலிவு எய்தி * மேகலையும் ஈடு அழிந்து * என்
    அகமேனி ஒழியாமே * திருமூழிக்களத்தார்க்கே (10)
  • TVM 9.7.11
    3749 ## ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் * ஒண்சுடரை *
    ஒழிவு இல்லா அணி மழலைக் * கிளிமொழியாள் அலற்றிய சொல் **
    வழு இல்லா வண் குருகூர்ச் * சடகோபன் வாய்ந்து உரைத்த *
    அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் * நோய் அறுக்குமே (11)