O Stork! Go as a Messenger to the Lord of Tirumūḻikkaḷam.
நாரையே! திருமூழிக்காளத்தானிடம் தூது செல்
3739 எங்கானலகங்கழிவாய் இரைத்தேர்ந்திங்கினிதமரும் *
செங்காலமடநாராய்! திருமூழிக்களத்துறையும் *
கொங்கார்பூந்துழாய்முடி எங்குடக்கூத்தர்க்கு என் தூதாய் *
நுங்கால்கள்என்தலைமேல் கெழுமீரோநுமரோடே. (2)