Chapter 10

Āzhvār advises everyone to reach Thirukkannapuram - (மாலை நண்ணி)*

திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல்

Bhagavān, cognizant of Āzhvār’s heart yearning to attain Him, consoles saying, “Āzhveer! Why are you mourning that you haven’t attained me yet? I am the one who feels incomplete without you! I have left paramapadham for you and taken residence in Thirukkannapuram. I will grant your wish at the end of this birth.” Pacified by Bhagavān’s words, Āzhvār

+ Read more

பகவானைப் பெறவேண்டும் என்கிற மனோரதம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் இருப்பதைப் பகவான் அறிந்தான். “ஆழ்வீர்! என்னை அடையவில்லையே என்று நீர் ஏன் கவலையுறுகிறீர்! உம்மையடையாமல் குறைபடுகிறவன் நானே! உமக்காகவே பரமபதத்தை விட்டுத் திருக்கண்ணபுரத்திற்கு வந்து இருக்கிறேன். இந்த சரீரத்தின் முடிவில்

+ Read more
Verses: 3772 to 3782
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will have their karma removed
  • TVM 9.10.1
    3772 ## மாலை நண்ணித் * தொழுது எழுமினோ வினை கெட *
    காலை மாலை * கமல மலர் இட்டு நீர் **
    வேலை மோதும் மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து *
    ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் * அடி இணைகளே (1)
  • TVM 9.10.2
    3773 கள் அவிழும் மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் *
    நள்ளி சேரும் வயல் சூழ் * கிடங்கின் புடை **
    வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் * திருக் கண்ணபுரம் *
    உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே (2)
  • TVM 9.10.3
    3774 தொண்டர் நும் தம் * துயர் போக நீர் ஏகமாய் *
    விண்டு வாடா மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் **
    வண்டு பாடும் பொழில் சூழ் * திருக்கண்ணபுரத்து
    அண்ட வாணன் * அமரர் பெருமானையே (3)
  • TVM 9.10.4
    3775 மானை நோக்கி * மடப் பின்னை தன் கேள்வனை *
    தேனை வாடா மலர் இட்டு * நீர் இறைஞ்சுமின் **
    வானை உந்தும் மதிள் சூழ் * திருக்கண்ணபுரம் *
    தான் நயந்த பெருமான் * சரண் ஆகுமே (4)
  • TVM 9.10.5
    3776 சரணம் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
    மரணம் ஆனால் * வைகுந்தம் கொடுக்கும் பிரான் **
    அரண் அமைந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்
    தரணியாளன் * தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே (5)
  • TVM 9.10.6
    3777 அன்பன் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
    செம் பொன் ஆகத்து * அவுணன் உடல் கீண்டவன் **
    நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து
    அன்பன் * நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே (6)
  • TVM 9.10.7
    3778 மெய்யன் ஆகும் * விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் *
    பொய்யன் ஆகும் * புறமே தொழுவார்க்கு எல்லாம் **
    செய்யில் வாளை உகளும் * திருக்கண்ணபுரத்து
    ஐயன் * ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே (7)
  • TVM 9.10.8
    3779 அணியன் ஆகும் * தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் *
    பிணியும் சாரா * பிறவி கெடுத்து ஆளும் **
    மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணரம்
    பணிமின் * நாளும் பரமேட்டி தன் பாதமே (8)
  • TVM 9.10.9
    3780 பாதம் நாளும் * பணியத் தணியும் பிணி *
    ஏதம் சாரா * எனக்கேல் இனி என்குறை? **
    வேத நாவர் விரும்பும் * திருக்கண்ணபுரத்து
    ஆதியானை * அடைந்தார்க்கு அல்லல் இல்லையே (9)
  • TVM 9.10.10
    3781 இல்லை அல்லல் * எனக்கேல் இனி என் குறை? *
    அல்லி மாதர் அமரும் * திருமார்பினன் **
    கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் * திருக்கண்ணபுரம்
    சொல்ல * நாளும் துயர் பாடு சாராவே (10)
  • TVM 9.10.11
    3782 ## பாடு சாரா * வினை பற்று அற வேண்டுவீர் *
    மாடம் நீடு * குருகூர்ச் சடகோபன் ** சொல்
    பாடலான தமிழ் * ஆயிரத்துள் இப்பத்தும்
    பாடி ஆடி * பணிமின் அவன் தாள்களே (11)