Chapter 1

Āzhvār instructs us to get rid of kinsfolk acquired due to our karma but associate oneself with the Lord, who in all aspects, is our all encompassing kinsfolk.

கர்மவசத்தால் கிட்டிய பந்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)
This segment of Thiruvāymozhi's divine intent is to remove the delusion in those who believe, ‘In this world, only kinsfolk will protect me’. emperumān is the one and only protector irrespective of what situation one finds themselves in. Āzhvār emphasizes that those we assume as our kinsfolk are not our true protectors.
‘உலகில், உறவினர்களே நம்மைக் காப்பவர்கள்’ என்று நம்பி இருப்பவர்களின் மருள் நீங்குமாறு அருளிச் செய்தது இத்திருவாய்மொழி. எந்த நிலையிலும் எம்பெருமான் ஒருவனே ரக்ஷகன். உறவினர்களாக நினைக்கப்படுகிறவர்கள் உண்மையான ரக்ஷகர்கள் அல்லர் என்று ஈண்டு ஆழ்வார் உணர்த்துகிறார்.
Verses: 3673 to 3683
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will be like our esteemed ancestors
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 9.1.1

3673 கொண்டபெண்டிர்மக்களுற்றார் சுற்றத்தவர்பிறரும் *
கண்டதோடுபட்டதல்லால் காதல்மற்றுயாதுமில்லை *
எண்திசையும் கீழும்மேலும் முற்றவும்உண்டபிரான் *
தொண்டரோமாய்உய்யலல்லால்இல்லைகண்டீர் துணையே. (2)
3673 ## கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் * சுற்றத்தவர் பிறரும் *
கண்டதோடு பட்டது அல்லால் * காதல் மற்று யாதும் இல்லை **
எண் திசையும் கீழும் மேலும் * முற்றவும் உண்ட பிரான் *
தொண்டரோமாய் உய்யல் அல்லால் * இல்லை கண்டீர் துணையே (1)
3673 ## kŏṇṭa pĕṇṭir makkal̤ uṟṟār * cuṟṟattavar piṟarum *
kaṇṭatoṭu paṭṭatu allāl * kātal maṟṟu yātum illai **
ĕṇ ticaiyum kīzhum melum * muṟṟavum uṇṭa pirāṉ *
tŏṇṭaromāy uyyal allāl * illai kaṇṭīr tuṇaiye (1)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Neither the wife you acquired, nor the sons born to you, nor your other relations and friends, will love you for anything other than money. Your salvation lies in being the devoted vassal of the great Benefactor, who swallowed everything that lay in all ten directions.

Explanatory Notes

(i) Addressing the men of this world, the Saint impresses upon them that they need hardly deceive themselves by lavishing their misplaced affections on the earthly relations, who are not of real consequence and that they will do well to lean, instead, on the Supreme Lord, in view of the inviolable, eternal bond between them and Him. The Āzhvār does not mince matters and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்ட பெண்டிர் நம் உறவினர் என்று நாம் நினைக்கும்; மக்கள் உற்றார் மனைவிமக்கள் உற்றார்; சுற்றத்தவர் பிறரும் உறவினர் மற்றுமுள்ளோர்; கண்டதோடு நம் கையில் பொருள் இருக்கும் வரை; பட்டது அல்லால் உறவாடுவார்களே அன்றி; காதல் மற்று உண்மையான உள் அன்பு ஒன்றும்; யாதும் இல்லை யாரிடமும் இல்லை; எண் திசையும் ஆதலால் எட்டுத் திக்கிலும்; கீழும் மேலும் பாதாளத்திலும் மேல் உலகிலும்; முற்றவும் உள்ள அனைத்தையும்; உண்ட பிரளயத்தில் உண்டு வயிற்றில் வைத்து; பிரான் காத்த எம்பெருமானுக்கு; தொண்டரோம் ஆய் தொண்டராய்; உய்யல் அல்லால் இருந்து கைங்கர்யம் செய்வது தவிர; இல்லை துணையே கண்டீர் வேறு உபாயம் இல்லை
makkal̤ children et al; uṝār close relatives, like in-laws; suṝaththavar other relatives; piṛarum friends, servants et al; kaṇdadhŏdu when they see something to be received from us; pattadhu allāl they will agree with us, other than that; maṝu in other situations; yādhum even a little bit; kādhal illai have no love for us.; eṇ thisaiyum with all directions; kīzhum earth and nether worlds; mĕlum higher worlds; muṝavum everything; uṇda mercifully consumed and protected from deluge; pirān for the great benefactor; thoṇdarŏmāy being servitors; uyyal allāl other than being uplifted; illai thuṇai no other refuge.; thuṇaiyum companions; sārvum the refuge

TVM 9.1.2

3674 துணையும் சார்வுமாகுவார்போல் சுற்றத்தவர்பிறரும் *
அணையவந்தஆக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர் *
கணையொன்றாலேயேழ்மரமும்எய்த எம்கார்முகிலை *
புணையென்றுய்யப்போகலல்லால் இல்லைகண்டீர் பொருளே.
3674 துணையும் சார்வும் ஆகுவார் போல் * சுற்றத்தவர் பிறரும் *
அணைய வந்த ஆக்கம் உண்டேல் * அட்டைகள்போல் சுவைப்பர் **
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த * எம் கார் முகிலை *
புணை என்று உய்யப் போகல் அல்லால் * இல்லை கண்டீர் பொருளே (2)
3674 tuṇaiyum cārvum ākuvār pol * cuṟṟattavar piṟarum *
aṇaiya vanta ākkam uṇṭel * aṭṭaikal̤pol cuvaippar **
kaṇai ŏṉṟāle ezh maramum ĕyta * ĕm kār mukilai *
puṇai ĕṉṟu uyyap pokal allāl * illai kaṇṭīr pŏrul̤e (2)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Earthly relatives and others often pursue your wealth under the guise of being genuine benefactors, but their intentions are like leeches, draining you as long as they can. It's wiser to seek refuge in our cloud-hued Lord, who effortlessly pierced seven trees with just one arrow. Relying on others is futile; turning to the Lord is the true path.

Explanatory Notes

(i) (The earthly relations flock, in strength, to those enjoying wealth and opulence, just to grab whatever they can. These are veritable parasites, putting on the garb of well-wishers and benefactors and are least dependable. On the other hand, the Lord succours even those who are sceptical and entertain doubts about His strength and dispensation. Sugrīva’s attitude towards + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துணையும் ஆபத்துக் காலத்தில் துணை போலவும்; சார்வும் சார்வு போலவும்; ஆகுவார் போல் உதவுவது போல்; சுற்றத்தவர் பிறரும் உறவினர்களும் மற்றவர்களும்; ஆக்கம் உண்டேல் செல்வம் உள்ள வரை; அட்டைகள் போல் அட்டைகள் போல்; அணைய வந்த உடன் வந்து; சுவைப்பர் ஒட்டி உறவாடுவார்கள்; கணை ஒன்றாலே ஓர் அம்பாலே; ஏழ் மரமும் எய்த ஏழு மராமரங்களையும் எய்த; எம் கார் முகிலை எம் காளமேகப் பெருமானை; புணை என்று உய்ய தஞ்சம் என்று உய்ய; போகல் அல்லால் ஒரே வழி என்பதைத் தவிர; பொருளே இல்லை வேறு வழி இல்லை என்பதை; கண்டீர் அறிவீர்களாக
āguvār pŏl pretending to be; suṝaththavar relatives; piṛarum others; aṇaiya their; vandha getting; ākkam benefit; uṇdĕl if present; attaigal̤ pŏl like leeches; suvaippar pretending to be doing favour for him, but will suck out completely;; kaṇai onṛālĕ with an arrow; ĕzh maramum seven ebony trees; eydha the benefactor who shot; em one who makes us faithful too; kārmugilai one who has the nature of a dark cloud; puṇai enṛu considering as refuge; uyyap pŏgal allāl other than being uplifted; porul̤ benefit; illai not there.; kai in hand; porul̤ wealth

TVM 9.1.3

3675 பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றியென் றேற்றெழுவர் *
இருள்கொள்துன்பத்தின்மைகாணில் என்னே! என்பாருமில்லை *
மருள்கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப் பிறந்தாற்கு *
அருள்கொளாளாயுய்யலல்லால் இல்லைகண்டீரரணே.
3675 பொருள் கை உண்டாய்ச் செல்லக்காணில் * போற்றி என்று ஏற்று எழுவர் *
இருள்கொள் துன்பத்து இன்மை காணில் * என்னே என்பாரும் இல்லை **
மருள்கொள் செய்கை அசுரர் மங்க * வடமதுரைப் பிறந்தாற்கு *
அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் * இல்லை கண்டீர் அரணே (3)
3675 pŏrul̤ kai uṇṭāyc cĕllakkāṇil * poṟṟi ĕṉṟu eṟṟu ĕzhuvar *
irul̤kŏl̤ tuṉpattu iṉmai kāṇil * ĕṉṉe ĕṉpārum illai **
marul̤kŏl̤ cĕykai acurar maṅka * vaṭamaturaip piṟantāṟku *
arul̤kŏl̤ āl̤āy uyyal allāl * illai kaṇṭīr araṇe (3)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

When men see money in your hands, they praise and court you, securing one thing or another before they leave. However, none will come to you out of pity when severe poverty casts its shadow upon you. There is indeed no other way for your salvation except through the grace of the Lord who was born in North Maturai to quell the Asuras who inflicted pain on all.

Explanatory Notes

(i) The worldly men are essentially selfish and they befriend only those who possess money and lavish praises on them. The latter easily succumb to these sycophants and are misled into believing that they are all genuine well-wishers, with no personal ends in view. The confidence-tricksters will then have no hesitation in fleecing the wealthy men, cheating them, right + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருள் கை செல்வம் கையில்; உண்டாய் உள்ளதைக்; செல்ல காணில் கண்டார்களாகில்; போற்றி என்று அவனை வாழ்த்தி; ஏற்றி அவன் கொடுக்கும் பரிசுகளை ஏற்று; எழுவர் விடை பெற்றுச் செல்வர்; இருள் கொள் வருத்தம் விளைவிக்கும்; துன்பத்து இன்மை துன்பம் ஏற்படுவதை; காணில் என்னே! கண்டவுடன் ஐயோ என்பாரும்; என்பாரும் இல்லை இல்லை உதவுபவரும் இல்லை; மருள் கொள் நெஞ்சு கலங்கும்படியான; செய்கை செய்கைகளை உடைய; அசுரர் மங்க அசுரர்கள் அழிய; வடமதுரை வடமதுரையில்; பிறந்தாற்கு பிறந்த கண்ணனுக்கு; அருள் கொள் ஆட்பட்டு அடிமை கொண்டு; ஆளாய் கைங்கர்யம் செய்து; உய்யல் அல்லால் உய்வதைத் தவிர; கண்டீர் வேறு உபாயமோ; அரணே புகலோ ஒன்றும் இல்லை
uṇdāy sella present; kāṇil when they see; pŏṝi enṛu performing mangal̤āṣāsanam; ĕṝu accepting (whatever was given by him (the individual)); ezhuvar leave (as they desire);; irul̤ kol̤ abundance of ignorance and darkness; thunbaththu very sorrowful; inmai poverty; kāṇil when they see; ennĕ alas!; enbārum showing compassion saying; illai not there;; marul̤ kol̤ heart wrenching; seygai having activities; asurar demons; manga to destroy them; vada madhurai in northern mathurā; piṛandhāṛku for krishṇa who incarnated in; arul̤ kol̤ being the target of his mercy; āl̤āy being servitors; uyyal allāl other than being uplfited; araṇ other refuge; illai not there.; aṝa kālaikku for the times when we have no means (help); araṇam āvar being the refuge

TVM 9.1.4

3676 அரணமாவரற்றகாலைக்கு என்றென்றமைக்கப்பட்டார் *
இரணங்கொண்டதெப்பர்ஆவர் இன்றியிட்டாலும் அஃதே *
வருணித்தென்னே? வடமதுரைப்பிறந்தவன்வண்புகழே *
சரணென்றுய்யப்போகலல்லால் இல்லைகண்டீர்சதிரே.
3676 அரணம் ஆவர் அற்ற காலைக்கு * என்று என்று அமைக்கப்பட்டார் *
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் * இன்றியிட்டாலும் அஃதே **
வருணித்து என்னே * வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே *
சரண் என்று உய்யப் போகல் அல்லால் * இல்லை கண்டீர் சதிரே (4)
3676 araṇam āvar aṟṟa kālaikku * ĕṉṟu ĕṉṟu amaikkappaṭṭār *
iraṇam kŏṇṭa tĕppar āvar * iṉṟiyiṭṭālum aḵte **
varuṇittu ĕṉṉe * vaṭamaturaip piṟantavaṉ vaṇ pukazhe *
caraṇ ĕṉṟu uyyap pokal allāl * illai kaṇṭīr catire (4)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

The men we court and pamper, after deep reflection, seem like our certain saviors in times of dire need, but they are helpless themselves and will ultimately betray us. It's pointless to rely on these ungrateful people. Instead, we should focus on the great glory of the One born in North Maturai, for our salvation lies only there.

Explanatory Notes

(i) Even those, who are currently well off, apprehend the possibility of lean days overtaking them and, therefore, lean, right from now, on some one in whom they have great confidence. But that very person, looked upon as their prospective saviour and pampered heavily, miserably lets them down, at the crucial moment. In Taittirīya Saṃhitā, First Kāṇḍa, fifth praśna, it + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அற்ற காலைக்கு ஆபத்துக் காலத்துக்கு; அரணம் ஆவர் புகலிடம் ஆவார்; என்று என்று என்று பலகாலம் சிந்தித்து; அமைக்கப்பட்டார் அமைக்கப்பட்டவர்கள் நம்மை; இரணம் கொண்ட கடன் கொடுத்தவர் போல்; தெப்பர் ஆவர் துச்சமாகக் கருதுவர்; இன்றியிட்டாலும் செல்வத்தை கொடுத்தாலும்; அஃதே கொடாவிட்டாலும் அப்படியே; வருணித்து என்னே! சொல்லிப் பயன் இல்லை; வடமதுரை வடமதுரையில்; பிறந்தவன் பிறந்த கண்ணனின்; வண் புகழே சிறந்த குணங்களைப் பாடி வணங்குவதே; சரண் என்று புகலிடம் என்று கருதி; உய்யப் போகல் அல்லால் உய்வதைத் தவிர; சதிரே இல்லை கண்டீர் வேறு உபாயம் இல்லை
enṛu enṛu thinking like this repeatedly; amaikkap pattār those who were captivated by offering wealth etc; iraṇam debt; koṇda like those who had; theppar āvar will leave;; inṛi ittālum even if we don-t consider; ahdhĕ their non-helping nature is well established;; varuṇiththu highlighting their ungrateful nature; ennĕ what is the use?; vada madhurai in northern mathurā; piṛandhavan the one who is born, his; vaṇ causeless favour; pugazhĕ qualities such as ṣeela (simplicity), saulabhya (easy approachability) etc; saraṇ refuge; enṛu thinking as; uyya being uplifted; pŏgal allāl instead of doing; sadhir activity; illai not present.; sadhuram (to attract the beloved person) having sadhir (ability); enṛu as

TVM 9.1.5

3677 சதுரமென்றுதம்மைத்தாமே சம்மதித்தின்மொழியார் *
மதுரபோகம்துற்றவரே வைகிமற்றொன்றுறுவர் *
அதிர்கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப் பிறந்தாற்கு *
எதிர்கொளாளாயுய்யலல்லால் இல்லைகண்டீரின்பமே.
3677 சதுரம் என்று தம்மைத் தாமே * சம்மதித்து இன்மொழியார் *
மதுர போகம் துற்றவரே * வைகி மற்று ஒன்று உறுவர் **
அதிர்கொள் செய்கை அசுரர் மங்க * வடமதுரைப் பிறந்தாற்கு *
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் * இல்லை கண்டீர் இன்பமே (5)
3677 caturam ĕṉṟu tammait tāme * cammatittu iṉmŏzhiyār *
matura pokam tuṟṟavare * vaiki maṟṟu ŏṉṟu uṟuvar **
atirkŏl̤ cĕykai acurar maṅka * vaṭamaturaip piṟantāṟku *
ĕtirkŏl̤ āl̤āy uyyal allāl * illai kaṇṭīr iṉpame (5)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Truly, those who boast of their abilities and indulge in worldly pleasures will eventually face shame and ridicule. The greatest bliss lies in being the devoted servant of the Lord born in North Maturai, who came to vanquish the wicked Asuras and establish righteousness.

Explanatory Notes

(i) With their youthful vigour and wealth drained off, the erstwhile heroes, the dynamic centre of attraction for the voluptuous women of rare beauty, fade out miserably. And yet, these men try, in vain, to trade on their past reputation and are beaten back and unrelentingly repelled by those very women on whom they had lavished their love and lucre. The necessity for + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சதுரம் என்று நல்ல வாழ்வு உடையோம் என்று; தம்மை தாமே தம்மைத் தாமே; சம்மதித்து ஏமாற்றிகொண்டு தம்மைப் புகழும்; இன் மொழியார் இனிய பேச்சுக்களை உடைய; மதுர போகம் பெண்களின் இனிய போகத்தை; துற்றவரே அநுபவித்தவர்கள்; வைகி இளமை கழிந்த பின்; மற்று அவர்களால்; ஒன்று உறுவர் புறக்கணிக்கப்படுவர்; அதிர் கொள் அஞ்சப்படும் பயம் உண்டாகும்; செய்கை செய்கைகளை உடைய; அசுரர் மங்க அசுரர்கள் அழிவுக்கென்றே; வடமதுரை வடமதுரையில்; பிறந்தாற்கு பிறந்த கண்ணனுக்கு; எதிர்கொள் அடிமைப்படுவதையே; ஆளாய் உய்யல் உய்யும் உபாயம் என்று; அல்லால் கொள்வதைத் தவிர; இல்லை கண்டீர் இன்பமே வேறு சுகம் ஒன்றும் இல்லை
thammai self; thāmĕ oneself; sammadhiththu speaking to; in pleasant; mozhiyār women who have speech, their; madhuram sweet; bŏgam enjoyability; thuṝavarĕ those who enjoyed; vaigi in other times; maṝu onṛu contrary results such as insult etc; uṛuvar will get;; adhir kol̤ causing great torment; seyrai having as nature; asurar demons; manga to be annihilated; vada madhurai in northern mathurā; piṛandhāṛku to krishṇa, who incarnated; edhir kol̤ persons who go towards; āl̤āy being servitors; uyyal allāl other than being uplifted; inbam ultimate joy; illai not there.; inbam that which is in the form of joy; illai kaṇdīr not there;

TVM 9.1.6

3678 இல்லைகண்டீரின்பமந்தோ! உள்ளதுநினையாதே *
தொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்? *
மல்லைமூதூர் வடமதுரைப்பிறந்தவன்வண்புகழே *
சொல்லியுய்யப்போகலல்லால் மற்றொன்றில்லைசுருக்கே.
3678 இல்லை கண்டீர் இன்பம் அந்தோ * உள்ளது நினையாதே *
தொல்லையார்கள் எத்தனைவர் * தோன்றிக் கழிந்தொழிந்தார் **
மல்லை மூதூர் * வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே *
சொல்லி உய்யப் போகல் அல்லால் * மற்றொன்று இல்லை சுருக்கே (6)
3678 illai kaṇṭīr iṉpam anto * ul̤l̤atu niṉaiyāte *
tŏllaiyārkal̤ ĕttaṉaivar * toṉṟik kazhintŏzhintār **
mallai mūtūr * vaṭamaturaip piṟantavaṉ vaṇ pukazhe *
cŏlli uyyap pokal allāl * maṟṟŏṉṟu illai curukke (6)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Many individuals from the past have passed away without realizing the ultimate eternal goal; unfortunately, there is no true happiness in this world. Our salvation lies in praising the magnificent Lord, who was born in the rich and ancient North Maturai. This is a simple truth that cannot be explained in any other way.

Explanatory Notes

The Āzhvār deplores the fate of myriads of men who have come into this world and passed out, without realising the eternal values of life and the everlasting happiness resulting therefrom. What a pity! these men failed to discover that there is no real happiness over here and that the Supreme Lord alone can bestow real and lasting happiness through our loving and intimate + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இல்லை சுகமாக இருப்பது என்பது இல்லை; இன்பம் கண்டீர் என்பதை அறிவீர்!; அந்தோ! அந்தோ!; உள்ளது எம்பெருமானைத் தவிர நிலையானது ஒன்று; நினையாதே இல்லை என்பதை அறியாதவர்கள்; தொல்லையார்கள் பழைய காலத்திலிருந்தவர்கள்; எத்தனைவர் எத்தனை பேர்; தோன்றி பிறந்து பயன் பெறாமல்; கழிந்தொழிந்தார் மரணமடைந்துள்ளனர்; மல்லை மூதூர் செல்வம் மிகுந்த பழைய; வடமதுரை வடமதுரையில்; பிறந்தவன் பிறந்த கண்ணனின்; வண் புகழே உதாரமான குணங்களையே; சொல்லி பாடி வணங்கி; உய்ய போகல் அல்லால் உய்ந்து போவதைத் தவிர; சுருக்கே சுருங்கச் சொல்லும் வழி; மற்றொன்று இல்லை வேறு ஒன்று இல்லை
andhŏ! alas!; ul̤l̤adhu the true nature of bhagavān who is eternal and blissful; ninaiyādhĕ instead of thinking; thollaiyārgal̤ those who were there in ancient times; eththanaivar many persons; thŏnṛik kazhindhu ozhindhār they were fully engaged in birth and death repeatedly;; mallai with abundance of perfect wealth; mudhu ancient (connected with emperumān since vāmanāvathāram); ūr town; vadamadhurai in northern mathurā; piṛandhavan one who incarnated; vaṇ refreshing; pugazh qualities; solli praising; uyyap pŏgal allāl other than being uplifted; maṝu any other; surukku that which is to be stated briefly; onṛu illai there is none.; maṝu other; onṛu illai there is nothing to say;

TVM 9.1.7

3679 மற்றொன்றில்லைசுருங்கச்சொன்னோம் மாநிலத்தெவ்வுயிர்க்கும் *
சிற்றவேண்டாசிந்திப்பேயமையும் கண்டீர்களந்தோ! *
குற்றமன்றுஎங்கள்பெற்றத்தாயன் வடமதுரைப்பிறந்தான் *
குற்றமில்சீர்கற்று வைகல்வாழ்தல்கண்டீர்குணமே.
3679 மற்றொன்று இல்லை சுருங்கச் சொன்னோம் * மா நிலத்து எவ் உயிர்க்கும் *
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் * கண்டீர்கள் அந்தோ **
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் * வடமதுரைப் பிறந்தான் *
குற்றம் இல் சீர் கற்று வைகல் * வாழ்தல் கண்டீர் குணமே (7)
3679 maṟṟŏṉṟu illai curuṅkac cŏṉṉom * mā nilattu ĕv uyirkkum *
ciṟṟa veṇṭā cintippe amaiyum * kaṇṭīrkal̤ anto **
kuṟṟam aṉṟu ĕṅkal̤ pĕṟṟat tāyaṉ * vaṭamaturaip piṟantāṉ *
kuṟṟam il cīr kaṟṟu vaikal * vāzhtal kaṇṭīr kuṇame (7)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Let me briefly tell you, people of this vast world! There is no way to attain salvation except by learning about and contemplating the flawless qualities of Kṛṣṇa, our Lord, who was born in North Maturai. This alone is meritorious and sufficient, without the need for exhausting and tedious practices.

Explanatory Notes

The Āzhvār now expounds the easy worshippabiḷity of the Lord and the sweetness that flows from worshipping Him. All those, in this abode of ours, surrounded by the oceanic waters, are eligible to partake of the Āzhvār’s advice and reap the rich reward. The importance of looking upon the Lord as the ‘Ready Means’ (siddhopāya), the Means and the End combined, is being emphasised + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்றொன்று இல்லை வேறு ஒன்று இல்லை; சுருங்கச் சொன்னோம் சுருங்கச் சொன்னோம்; மா நிலத்து உலகிலுள்ள; எவ் உயிர்க்கும் எல்லா உயிர்களுக்கும்; சிற்ற வேறு உபாயங்களைத்தேடி; வேண்டா சிதறிப் போக வேண்டாம்; சிந்திப்பே சிந்திப்பதாலேயே ரக்ஷணம்; அமையும் தானே அமையும்; கண்டீர்கள் அந்தோ! கண்டீர்கள் அந்தோ!; வடமதுரை வடமதுரையில்; பிறந்தான் பிறந்தவனான; எங்கள் பெற்றத் தாயன் எங்கள் கண்ணனின்; குற்றம் இல் குற்றமற்ற; சீர் குணங்களை; வைகல் கற்று எப்பொழுதும் கற்று; வாழ்தல் கண்டீர் வாழ்த்தி வணங்குவது; குணமே குணமாகுமே தவிர; குற்றம் அன்று குற்றமாகாது
surunga briefly; sonnŏm we told (you);; vast; nilaththu in earth; ev uyirkkum for all āthmās; siṝa vĕṇdā no need to sweat heavily;; sindhippĕ mere thoughts; amaiyum are sufficient;; kaṇdīrgal̤ you have seen (isn-t it well known as said in -āyāsa: smaraṇĕ kŏ-sya-); andhŏ alas!; kuṝam disaster; anṛu not;; engal̤ obedient towards devotees; peṝam for (ignorant) cows; thāyan being protector; vada madhurai in northern mathurā; piṛandhān one who incarnated, his; kuṝam il without any expectation, exclusively for the result of protecting his devotees; sīr qualities; kaṝu understanding them (through instructions); vaigal enjoying the qualities forever (as said in -sarvān kāmān sŏ-ṣnuthĕ-); vāzhdhal kaṇdīr live!; guṇam natural and apt.; vāzhdhal living; idhu isn-t this

TVM 9.1.8

3680 வாழ்தல்கண்டீர்குணமிதந்தோ! மாயவனடிபரவி *
போழ்துபோகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு *
வாழ்துணையா வடமதுரைப்பிறந்தவன்வண்புகழே *
வீழ்துணையாய்ப்போமிதனில் யாதுமில்லைமிக்கதே.
3680 வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ * மாயவன் அடி பரவி *
போழ்து போக உள்ளகிற்கும் * புன்மை இலாதவர்க்கு **
வாழ் துணையா * வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே *
வீழ் துணையாப் போம் இதனில் * யாதும் இல்லை மிக்கதே (8)
3680 vāzhtal kaṇṭīr kuṇam itu anto * māyavaṉ aṭi paravi *
pozhtu poka ul̤l̤akiṟkum * puṉmai ilātavarkku **
vāzh tuṇaiyā * vaṭamaturaip piṟantavaṉ vaṇ pukazhe *
vīzh tuṇaiyāp pom itaṉil * yātum illai mikkate (8)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Indeed, many are unaware of the true essence of existence. There exists no greater joy for the pure-hearted than to contemplate and sing the magnificent glory of the wondrous Lord born in North Maturai.

Explanatory Notes

(i) This is one of the several stanzas of the ‘Divya Prabandhas’ that lend support to Saint Rāmānuja’s elucidation, in the ‘Antarādhikaraṇa’ of his Śrī Bhāṣya, of the main purpose of the Lord’s incarnations. Although the triple functions of succouring the Saintly, vanquishing the wicked and re-establishment of the moral order of things could have as well been achieved + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாழ்தல் வாழ்தலான; குணம் இது இதுவன்றோ குணமாவது?; கண்டீர் அந்தோ! இது லோகப் பிரசித்தமன்றோ?; மாயவன் மாயவனான எம்பெருமானின்; அடி பரவி திருவடிகளை வாழ்த்தி வணங்கி; போழ்து போக பொழுதைப் போக்க; உள்ளகிற்கும் நினைக்கும்; புன்மை இலாதவர்க்கு உத்தம அதிகாரிகளுக்கு; வாழ் துணையா வாழ்க்கைக்குத் துணையாவதற்காக; வடமதுரை வடமதுரையில்; பிறந்தவன் பிறந்த கண்ணனின்; வண் புகழே சிறந்த குணங்களைப் பாடி; வீழ் துணையாய் விரும்பி துணையாகக் கொண்டு; போம் இதனில் நடப்பதிற்காட்டிலும்; யாதும் மிக்கதே மேற்பட்ட வாழ்வு; இல்லை வேறு ஒன்றுமில்லை
guṇam natural (for everyone)!; kaṇdīr īsn-t this world renowned!; andhŏ alas!; māyavan sarvĕṣvara who has amaśing qualities and activities; adi divine feet; paravi praising due to being pleased; pŏzhdhu pŏga to spend the time; ul̤l̤agiṛkum being able to think; punmai inferiority (relationship with other benefits); ilādhavarkku for those who don-t have; vāzh life matching the true nature; thuṇaiyā to be upāyabhūtha (means); vadamadhurai in northern mathurā; piṛandhavan krishṇa who incarnated, his; vaṇ enjoyable for his devotees; pugazhĕ qualities only; vīzh loving; thuṇaiyā as companion for enjoyment; pŏm occurring; idhanil in this; mikkadhu greater; yādhum any other live; illai not there.; adhanil more than that; mikku greater benefit

TVM 9.1.9

3681 யாதுமில்லைமிக்கதனில் என்றென்றதுகருதி *
காதுசெய்வான்கூதைசெய்து கடைமுறைவாழ்க்கையும்போம் *
மாதுகிலின்கொடிக்கொள்மாட வடமதுரைப்பிறந்த *
தாதுசேர்தோள்கண்ணலல்லால் இல்லைகண்டீர்சரணே.
3681 யாதும் இல்லை மிக்கு அதனில் * என்று என்று அது கருதி *
காது செய்வான் கூதை செய்து * கடைமுறை வாழ்க்கையும் போம் **
மா துகிலின் கொடிக்கொள் மாட * வடமதுரைப் பிறந்த *
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் * இல்லை கண்டீர் சரணே (9)
3681 yātum illai mikku ataṉil * ĕṉṟu ĕṉṟu atu karuti *
kātu cĕyvāṉ kūtai cĕytu * kaṭaimuṟai vāzhkkaiyum pom **
mā tukiliṉ kŏṭikkŏl̤ māṭa * vaṭamaturaip piṟanta *
tātu cer tol̤ kaṇṇaṉ allāl * illai kaṇṭīr caraṇe (9)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Often, mundane pursuits may seem paramount, but alas! they diminish, like the earlobes marred by wide piercings in pursuit of adornment. Yet, there exists no refuge except in Lord Kaṇṇaṉ, adorned with fine garlands, born amidst the banners atop the castles of North Maturai.

Explanatory Notes

(i) The Saint warns those seeking protection in any one other than the Supreme Lord, that they are in for deterioration, instead of going up the scale and that they would, in the bargain, get dislodged even from the old order of things. These men will, therefore, do well to seek refuge in the Supreme Lord, the unfailing Protector. This position is brought home vividly + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அதனில் பகவத்விஷயத்தைக் காட்டிலும்; யாதும் மிக்கு இல்லை வேறு சிறந்தது ஒன்று இல்லை; என்று என்று அது கருதி என்று பலகாலம் கருதி; கடைமுறை அதையே சிந்தித்து இருக்கும்; வாழ்க்கையும் போம் வாழ்க்கையும் கெட்டுப்போகும்; காது செய்வான் காதின் துளையைப் பெருக்க; கூதை செய்து அதை மூளி ஆக்குவது போலவே ஆகும்; மா துகிலின் பெரிய துகில்களால் உண்டான; கொடிக்கொள் கொடிகளை உடைய; மாட மாடங்களோடு கூடின; வடமதுரை வடமதுரையில்; பிறந்தவன் பிறந்த கண்ணன்; தாது சேர் மாலையணிந்த; தோள் தோள்களையுடைய; கண்ணன் அல்லால் கண்ணனை அல்லால்; சரணே வேறொரு புகலிடமே; இல்லை கண்டீர் இல்லை
yādhum any thing; illai not there;; enṛu enṛu repeatedly; adhu the other benefits in the form of aiṣvaryam (worldly wealth) and kaivalyam (self enjoyment); karudhi considered; kādhu seyvān trying to pierce the ear; kūdhai seydhu (even the base getting affected) becoming damaged; kadai muṛai vāzhkkaiyum the lowly benefits which are already present; pŏm will perish;; huge; thugilin made of cloth; kodi flags; kol̤ having; mādam having mansions; vada madhurai in northern mathurā; piṛandha one who incarnated; thādhu sĕr decorated with garlands of thul̤asi, vaijayanthi etc; thŏl̤ having shoulders; kaṇṇan krishṇa; allāl other than; saraṇ refuge for the goal; illai not there;; kaṇdīr this can be seen by those who understand it.; kaṇṇan krishṇa; allāl other than

TVM 9.1.10

3682 கண்ணனல்லாலில்லைகண்டீர் சரண் அதுநிற்கவந்து *
மண்ணின்பாரம்நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான் *
திண்ணமாநும்முடைமையுண்டேல் அவனடிசேர்த் துய்ம்மினோ *
எண்ணவேண்டாநும்மதாதும் அவனன்றிமற்றில்லையே.
3682 கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் * சரண் அது நிற்க வந்து *
மண்ணின் பாரம் நீக்குதற்கே * வடமதுரைப் பிறந்தான் *
திண்ணமா நும் உடைமை உண்டேல் * அவன் அடி சேர்த்து உய்ம்மினோ **
எண்ண வேண்டா நும்மது ஆதும் * அவன் அன்றி மற்று இல்லையே (10)
3682 kaṇṇaṉ allāl illai kaṇṭīr * caraṇ atu niṟka vantu *
maṇṇiṉ pāram nīkkutaṟke * vaṭamaturaip piṟantāṉ *
tiṇṇamā num uṭaimai uṇṭel * avaṉ aṭi certtu uymmiṉo **
ĕṇṇa veṇṭā nummatu ātum * avaṉ aṉṟi maṟṟu illaiye (10)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

The Lord was born in North Maturai as Kaṇṇaṉ to affirm that He alone is our reliable refuge and to alleviate Mother Earth of her immense burden. Surrender everything you consider yours at His feet and achieve salvation; there's no need to hesitate, as everything ultimately belongs to Him.

Explanatory Notes

(i) The Gītā Śloka, “Paritrāṇāya Sādhūnām......” has been interpreted by our Ācāryas differently, at different places, but it should not be misconstrued that they are at variance with one another. Actually, these are the different facets of the central theme, namely, the Lord is the ‘Ready Means’ (Siddhopāya) around whom revolves the triple functions of His Avatāras, namely, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணன் அல்லால் கண்ணனைத் தவிர வேறு; இல்லை கண்டீர் சரண் புகலிடம் இல்லை; அது நிற்க என்பதைக் காட்டவும்; வந்து மண்ணின் பாரம் பூ பாரத்தை; நீக்குதற்கே போக்குவதற்காகவும்; வடமதுரை வடமதுரையில்; பிறந்தவன் பிறந்த கண்ணன்; நும் உடைமை உங்களுடைய உடைமை; உண்டேல் என்று ஒன்று இருக்குமாகில்; திண்ணமா அவன் திடமாக அவன்; அடி திருவடிகளிலே; சேர்ந்து உய்ம்மினோ சேர்ந்து உய்வு பெறுங்கள்; எண்ண வேண்டா யோசிக்க வேண்டாம்; நும்மது ஆதும் உங்களுடையதான எப்பொருளும்; அவன் அன்றி அவனதேயன்றி; மற்று இல்லையே வேறு இல்லை
saraṇ other prāpya (goal) and prāpaka (means); illai kaṇdīr not there;; adhu that nature of his being prāpya and prāpaka; niṛka to be established in the world; maṇṇin bāram the burden of demoniac people who are the enemies; nīkkudhaṛku to eliminate; vandhu leaving the nāga paryanka (ādhiṣĕsha mattress); vadamadhurai in northern mathurā; piṛandhān incarnated; num whatever you are claiming as yours; udaimai object; uṇdĕl if it is there; avan adi at his divine feet; thiṇṇamā firmly; sĕrththu uymminŏ offer them;; eṇṇa vĕṇdā need not analyse;; nummadhu your; ādhum all aspects in the form of prāpya and prāpaka; avan anṛi other than bhagavān who is all kinds of relative as said in -māthā pithā bhrāthā nivāsaṣ ṣaraṇam suhrudh gathir nārāyaṇa:-; maṝu any thing which is owned by self; illai not there.; avanil other than him; maṝu any other

TVM 9.1.11

3683 ஆதுமில்லைமற்றவனில் என்றதுவேதுணிந்து *
தாதுசேர்தோள்கண்ணனை குருகூர்ச்சடகோபன் சொன்ன *
தீதிலாதவொண்தமிழ்கள் இவையாயிரத்துள்இப்பத்தும் *
ஓதவல்லபிராக்கள் நம்மையாளுடையார்கள்பண்டே. (2)
3683 ## ஆதும் இல்லை மற்று அவனில் * என்று அதுவே துணிந்து *
தாது சேர் தோள் கண்ணனை * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
தீது இலாத ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
ஓத வல்ல பிராக்கள் * நம்மை ஆளுடையார்கள் பண்டே (11)
3683 ## ātum illai maṟṟu avaṉil * ĕṉṟu atuve tuṇintu *
tātu cer tol̤ kaṇṇaṉai * kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
tītu ilāta ŏṇ tamizhkal̤ * ivai āyirattul̤ ip pattum *
ota valla pirākkal̤ * nammai āl̤uṭaiyārkal̤ paṇṭe (11)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

The virtuous individuals who are familiar with these ten songs, chosen from the flawless thousand verses composed by Caṭakōpaṉ of Kurukūr in pure Tamil, devotedly placed their unwavering faith solely in Lord Kaṇṇan, the One adorned with garlands. They are regarded as masters by Caṭakōpaṉ and others of his kind for a long time.

Explanatory Notes

(i) The great ones, who learn and chant this decad, are said to attract unto them, as their vassals, the Lord’s devotees like the Āzhvār, right from the moment these chanters acquired the physical frames which eventually led them on to the study and recital of this decad.

(ii) It is the Āzhvār’s firm faith in the Supreme Lord, as the ‘Means’ and the ‘End’, that manifested + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவனில் மற்று அவனைத் தவிர; அதுவே வேறு தெய்வம்; ஆதும் இல்லை எதுவும் இல்லை; என்று துணிந்து என்று துணிந்து; தாது சேர் மாலையணிந்த; தோள் தோள்களையுடைய; கண்ணனை கண்ணனைக் குறித்து; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச் செய்த; தீது இலாத குற்றமற்ற; ஒண் தமிழ்கள் அழகிய தமிழ் மொழியில்; இவை அருளிச் செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இப்பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; ஓத வல்ல ஓத வல்ல; பிராக்கள் நம்மை ஸ்வாமிகள்; பண்டே ஏற்கெனவே நம்மை அடிமை; ஆளுடையார்கள் கொண்டவர் ஆவர்
ādhum an entity who is prāpya (goal) or prāpaka (means); illai not there;; enṛadhuvĕ only this; thuṇindhu faithfully; thādhusĕr decorated with garland; thŏl̤ having divine shoulders and being perfectly enjoyable due to that; kaṇṇanai krishṇa who is obedient towards his devotees; kurugūrch chatakŏpan āzhvār; sonna mercifully spoken; thīdhu defect in poem or its meanings; ilādha not having; oṇ having many good qualities; thamizhgal̤ in dhrāmida (thamizh); ivai āyiraththul̤ among the thousand pāsurams; ip paththum this decad; ŏdha valla able to recite; pirākkal̤ benefactors; paṇdĕ starting with the time of accepting body to recite these pāsurams; nammai for us; āl̤ udaiyārgal̤ lords.; theṇ clear; thirai having tides