Chapter 8
Āzhvār is astonished to see as Lord displays His peculiar form - (மாயா வாமனனே!)
எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்
Deciding to wipe away all of Āzhvār’s worries, Bhagavān was waiting for the right moment to intervene. Even though Āzhvār was aware of Bhagavān’s thought process, “ I am literally at death’s doorstep but He doesn’t allow my life force to separate from my body” says a surprised Āzhvār. In order to jolt Āzhvār even more, Bhagavān makes him aware that His nature is unfathomable to anyone, exhibits His unusual form. Āzhvār is stunned upon seeing Bhagavān, as elaborated in these hymns.
ஆழ்வாரின் வருத்தத்தைத் தீர்க்க எண்ணிய பகவான், அதற்கொரு நேரத்தை எதிர்பார்த்திருந்தான். இது ஆழ்வாருக்குத் தெரியுமாயினும், “உயிர் போகவேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டிருந்தும் போகவொட்டாமல் வைத்திருக்கிறானே” என்று நினைத்து வியந்தார். ஆழ்வாரை மேலும் வியக்கச் செய்யத்தன் விசித்திர விபூதித்துவத்தைப் + Read more
Verses: 3530 to 3540
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: பாலை யாழ்
Recital benefits: will be always His dear devotees
- TVM 7.8.1
3530 ## மாயா வாமனனே! * மதுசூதா நீ அருளாய் *
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் * விசும்பு ஆய்க் கால் ஆய் **
தாய் ஆய்த் தந்தை ஆய் * மக்கள் ஆய் மற்றும் ஆய் முற்றும் ஆய் *
நீ ஆய் நீ நின்றவாறு * இவை என்ன நியாயங்களே (1) - TVM 7.8.2
3531 அம் கள் மலர்த் தண் துழாய் முடி * அச்சுதனே அருளாய் *
திங்களும் ஞாயிறும் ஆய்ச் * செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய் **
பொங்கு பொழி மழை ஆய்ப் * புகழ் ஆய்ப் பழி ஆய்ப் பின்னும் நீ
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் * இவை என்ன விசித்திரமே (2) - TVM 7.8.3
3532 சித்திரத் தேர் வலவா * திருச் சக்கரத்தாய் அருளாய் *
எத்தனை ஓர் உகமும் * அவை ஆய் அவற்றுள் இயலும் **
ஒத்த ஒண் பல் பொருள்கள் * உலப்பு இல்லன ஆய் வியவு ஆய் *
வித்தகத்தாய் நிற்றி நீ * இவை என்ன விடமங்களே (3) - TVM 7.8.4
3533 கள் அவிழ் தாமரைக்கண் * கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் *
உள்ளதும் இல்லதும் ஆய் * உலப்பு இல்லன ஆய் வியவு ஆய் **
வெள்ளத் தடம் கடலுள் * விட நாகு அணைமேல் மருவி *
உள்ளப் பல் யோகு செய்தி * இவை என்ன உபாயங்களே! (4) - TVM 7.8.5
3534 பாசங்கள் நீக்கி * என்னை உனக்கே அறக் கொண்டிட்டு * நீ
வாச மலர்த் தண் துழாய் முடி * மாயவனே அருளாய் **
காயமும் சீவனும் ஆய்க் * கழிவு ஆய்ப் பிறப்பு ஆய் பின்னும் நீ *
மாயங்கள் செய்து வைத்தி * இவை என்ன மயக்குக்களே (5) - TVM 7.8.6
3535 மயக்கா வாமனனே! * மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் *
அயர்ப்பு ஆய்த் தேற்றமும் ஆய் * அழல் ஆய்க் குளிர் ஆய் வியவு ஆய் **
வியப்பு ஆய் வென்றிகள் ஆய் * வினை ஆய்ப் பயன் ஆய் பின்னும் நீ *
துயக்கு ஆய் நீ நின்றவாறு * இவை என்ன துயரங்களே (6) - TVM 7.8.7
3536 துயரங்கள் செய்யும் கண்ணா * சுடர் நீள் முடியாய் அருளாய் *
துயரம் செய் மானங்கள் ஆய் * மதன் ஆகி உகவைகள் ஆய் **
துயரம் செய் காமங்கள் ஆய்த் * துலை ஆய் நிலை ஆய் நடை ஆய் *
துயரங்கள் செய்து வைத்தி * இவை என்ன சுண்டாயங்களே (7) - TVM 7.8.8
3537 என்ன சுண்டாயங்களால் * நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா? *
இன்னது ஓர் தன்மையை என்று * உன்னை யாவர்க்கும் தேற்றரியை **
முன்னிய மூவுலகும் * அவை ஆய் அவற்றைப் படைத்து *
பின்னும் உள்ளாய் புறத்தாய்! * இவை என்ன இயற்கைகளே (8) - TVM 7.8.9
3538 என்ன இயற்கைகளால் * எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா? *
துன்னு கரசரணம் முதலாக * எல்லா உறுப்பும் **
உன்னு சுவை ஒளி * ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே *
உன்னை உணரவுறில் * உலப்பு இல்லை நுணுக்கங்களே (9) - TVM 7.8.10
3539 இல்லை நுணுக்கங்களே * இதனில் பிறிது என்னும் வண்ணம் *
தொல்லை நல் நூலில் சொன்ன * உருவும் அருவும் நீயே **
அல்லித் துழாய் அலங்கல் * அணி மார்ப என் அச்சுதனே *
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் * அதுவே உனக்கு ஆம் வண்ணமே (10) - TVM 7.8.11
3540 ## ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று * அறிவது அரிய அரியை *
ஆம் வண்ணத்தால் * குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த **
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
ஆம் வண்ணத்தால் உரைப்பார் * அமைந்தார் தமக்கு என்றைக்குமே (11)