Recounting Kaṇṇaṉ's Deeds, She Sheds Tears.
கண்ணன் செயல் கூறி இவள் கண்ணீர் சிந்துகிறாள்
3389 கரைகொள்பைம்பொழில்தண்பணைத் தொலை
வில்லிமங்கலம்கொண்டுபுக்கு *
உரைகொளின்மொழியாளை
நீருமக்காசை யின்றியகற்றினீர் *
திரைகொள்பௌவத்துச்சேர்ந்ததும்
திசைஞாலம்தாவியளந்ததும் *
நிரைகள்மேய்த்ததுமேபிதற்றி
நெடுங்கண்நீர்மல்கநிற்குமே.